வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இரண்டு முக்கிய பொறுப்புகளுக்கு... இந்திய வம்சாவளியினர் நியமனம்... பைடன் அதிடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் முக்கிய பொறுப்புகளில் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு நியமித்துள்ளது.

அமெரிக்காவில் இப்போது சுமார் 27 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் இரண்டாவது மிகப் பெரிய இனக்குழுவாக இந்தியர்கள் உள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்க மக்கள்தொகையில் இந்தியர்கள் சுமார் 1.8% என்ற அளவிலேயே உள்ளனர்.

Biden appoints two Indian-origin experts to key positions

தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன், பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தொடர்ந்து இந்திய வம்சாவளியினரையே நியமித்து வருகிறார். அதன்படி தற்போது சோனாலி நிஜவாஹன், ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி என இரண்டு அமெரிக்க இந்தியர்களை முக்கிய பொறுப்புகளில் பைடன் அரசு நியமித்துள்ளது.

அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் இயங்கும் தன்னார்வ சமூக திட்டமான AmeriCorps-இன் வெளியுறவு விவகாரங்களின் புதிய தலைமை அதிகாரியாக ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வெளியுறவுத் துறையில் வெளிநாட்டுச் சேவை அதிகாரியாக ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி சுமார் 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தப்பினார் டிரம்ப்... போதிய வாக்குகள் இல்லாததால் கண்டன தீர்மானம் தோல்விதப்பினார் டிரம்ப்... போதிய வாக்குகள் இல்லாததால் கண்டன தீர்மானம் தோல்வி

அதேபோல AmeriCorps-இன் திட்ட இயக்குநராக சோனாலி நிஜவாஹன் நியமிக்கப்பட்டுள்ளார். சோனாலி நிஜவாஹன் இதற்கு முன் கலிஃபோர்னியா கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இருவரும் பைடன் நிர்வாகத்தின் செயல்திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தற்போது எதிர்கொண்டு வரும் நான்கு முக்கிய பிரச்சினைகளான கொரோனா, பொருளாதார மீட்டெடுப்பு, இனவெறி பேதம், காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இருவரும் கவனம் செலுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Two Indian-origin experts in public service have been appointed by the Biden administration to key positions at AmeriCorps
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X