வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க வரலாற்றில்.. 29 வயதில் முதல் செனட் உறுப்பினர்.. 77 வயதில் முதல் அதிபர்.. இது ஜோ பிடன் கதை !

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மிக எளிய குடும்ப பின்னணியை கொண்டவர்.

சாதாரண கார் சேல்ஸ் மேன் மகனாக பிறந்து தனக்கிருந்த அரசியல் திறமையால் படிப்படியாக வளர்ந்து இன்று அகில உலகமும் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

ஜோ பிடனை பொறுத்தவரை அரசியலில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சுவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடை பிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை... ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்தே அதிபர் பிடன் -வைரமுத்து குடை பிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை... ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்தே அதிபர் பிடன் -வைரமுத்து

கார் விற்பனையாளர்

கார் விற்பனையாளர்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ரஸ்ட் பெல்ட் என்ற சிறிய நகரத்தில் 1942-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதியன்று பிறந்தார் ஜோசப் ராபினெட் பிடன். பெற்றோர் சூட்டிய இந்தப் பெயரை ஜோ பிடன் என தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு மாற்றிக்கொண்டார். தந்தை கார் ஷோரூம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணியாற்றியதால் நடுத்தர வர்க்க குடித்தனம் நடத்தியது ஜோ பிடனின் குடும்பம்.

 வேலையிழப்பு

வேலையிழப்பு

1950-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜோ பிடனின் தந்தைக்கு வேலை பறிபோனது. சொந்த ஊரில் பிழைப்பு நடத்த இனியும் வழியில்லை என்பதால் ரஸ்ட் பெல்ட் நகரில் இருந்து டெலாவேருக்கு குடிபெயர்ந்தது ஜோ பிடன் குடும்பம். 10 வயது வரை சொந்த ஊரில் ஓடி ஆடி விளையாடிய நண்பர்களை விட்டுவிட்டு டெலாவேருக்கு செல்ல ஜோ பிடனுக்கு மனமில்லை. இருப்பினும் குடும்ப சூழலை உணர்ந்து தனது நினைவுகளை சுமந்தப்படி டெலாவேருக்கு சென்றார் ஜோ பிடன்.

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்

டெலாவேரில் கருப்பின மக்களின் பாதுகாவலராக தனது இமேஜை வளர்த்துக் கொண்ட ஜோ பிடன் இளம் பிராயத்திலேயே அரசியல் மீது ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். மகனின் அரசியல் ஆசைக்கு குறுக்கீடு செய்யாத ஜோ பிடனின் தந்தை, அவரை அவரது விருப்பப்படி சிராகியூஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க வைத்தார். அதன் பின்னர் இனவெறிக்கு எதிராக ஓங்கி ஒலித்து முழங்கத் தொடங்கிய ஜோ பிடன் குரல் இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

முதல் மனைவி கொலை

முதல் மனைவி கொலை

ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துகொண்டிருந்த ஜோ பிடனுக்கு 1972-ம் ஆண்டு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தது. கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சென்றிருந்த ஜோ பிடனின் மனைவி நெலியா மற்றும் மகள் நவோமி கார் விபத்தில் பலியாகினர். இரண்டு மகன்களும் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர். முதலில் விபத்தாக கருதப்பட்ட நிலையில் அது எதிரிகளால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கொலை என்பது ஜோ பிடனுக்கு பின்னர் தெரிய வந்தது.

பிடன் 2-வது திருமணம்

பிடன் 2-வது திருமணம்

முதல் மனைவி இறந்த நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்த ஜோ பிடன் 1975-ம் ஆண்டு ஆசிரியை ஜில் என்பவரை சந்திக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் இரண்டாண்டு நீடிக்கிறது. பிறகு 1977-ம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். முதல் மனைவிக்கு பிறந்த ஹண்டர் மற்றும் பியூ என்ற இரு மகன்களும் ஜில்லை தனது சிற்றன்னையாக ஏற்றுக்கொண்டனர்.

பெண் குழந்தை

பெண் குழந்தை

ஜோ பிடனுக்கும் -ஜில் ஜாக்கபுக்கும் 1981-ம் ஆண்டு ஆஷ்லி என்ற பெண் குழந்தை ஒன்று பிறந்தார். ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்த நிலையில் அதில், மூத்த மகன் பியூவை மட்டும் தனது அரசியல் வாரிசாக வளர்த்தெடுத்தார் ஜோ பிடன். ஆனால் எதிர்பாராத விதமாக மூளை புற்றுநோய் காரணமாக பியூ கடந்த 2015-ம் ஆண்டு மரணத்தை தழுவினார். அரசியலில் தனக்கு மகன் பக்கபலமாக நிற்பார் என நினைத்திருந்த ஜோ பிடனுக்கு மகன் பியூவின் மரணம் உலுக்கி எடுத்துவிட்டது.

போதைப்பொருள்

போதைப்பொருள்

ஜோ பிடனின் மற்றொரு மகனான ஹண்டர் குடிக்கு அடிமையாகி போதைப்பொருள்களை உட்கொண்டு தனது எதிர்காலத்தையே சிதைத்துக்கொண்டார். கோக்கைன் சோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததால் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை பிரிவில் இருந்து நீக்கப்பட்டார் ஹண்டர். அப்போது ஜனநாயக கட்சி ஆட்சியிலிருந்தும் மகனுக்காக எந்த சிபாரிசுக்கும் செல்லவில்லை ஜோ பிடன்.

 33 ஆண்டு கனவு

33 ஆண்டு கனவு

அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்பது ஜோ பிடனின் 33 ஆண்டு கால கனவு என்று கூட சொல்லலாம். 1987-ம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தலில் தோல்வியை தழுவினார் பிடன். ஒபாமா அதிபராக இருந்தபோது 8 ஆண்டுக்காலம் துணை அதிபராக இருந்தார். 2015-ல் மகன் மரணமடைந்ததால் அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த இவர் 2016 அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை.

 அரசியல் பதவி

அரசியல் பதவி

ஜோ பிடன் 1972-ம் ஆண்டு தனது 29-வது வயதில், அதாவது மிக இளம் வயதில் டெலாவேர் மாகாணத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் இளம் வயதில் எப்படி செனட் உறுப்பினர் ஆனாரோ, அதேபோல் 77 வயதில் அதிபரான முதல் நபர் என்ற பெருமையையும் ஜோ பிடன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Joe biden history and family background details
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X