வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓவர் நைட்டில்.. டிரம்ப்பை துரத்தியடித்த பிடன்.. அதிக வாக்குகள் பெற்று.. போறபோக்கில் ஒரு பொளேர் சாதனை

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் புதிய சாதனை படைத்துள்ளார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், போகிற போக்கில் ஒரு புதிய சாதனையையும் பெற்றுள்ளார்.

இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெறாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று ஜோ பிடன் புதிய வரலாறு படைத்துள்ளார். ஜோ பிடன் வெற்றி பெறும் பட்சத்தில், அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற முதல் அதிபர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும்.

ஜோ பிடன்தான் வெற்றி பெறுவார் என பலரும் ஆரம்பம் முதலே கணித்து வருகின்றனர். டிரம்ப் அந்த அளவுக்கு கெட்ட பெயரை சம்பாதித்து வைத்திருந்தார்.. குறிப்பாக கொரோனா விவகாரத்தில் அவர் ரொம்பவே சறுக்கி விட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பிடனுக்கு செம டஃப் கொடுத்துள்ளார் டிரம்ப்.

இடியாக இறங்கிய செய்தி.. அரிசோனா தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப்.. அதிகாலை 2.30 மணிக்கு பறந்த போன் கால்!இடியாக இறங்கிய செய்தி.. அரிசோனா தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப்.. அதிகாலை 2.30 மணிக்கு பறந்த போன் கால்!

 வெற்றி

வெற்றி

இருப்பினும் ஜோ பிடன் தான் வெற்றி பெறுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. முக்கியமான மாகாணங்களில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதை விட முக்கியமாக டிரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்று வருகிறார் ஜோ பிடன்... மேலும் தேர்தல் சாதனைகளையும் அவர் முறியடித்து வருகிறார்.

 சாதனை

சாதனை

அமெரிக்க வரலாற்றில் எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெறாத அளவுக்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார் ஜோ பிடன். இதுவரை அவருக்கு 7 கோடி வாக்குகள் கிடைத்துள்ளன. இது மிகப் பெரிய சாதனையாகும்.. இதற்கு முன்பு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை பராக் ஒபாமாதான் படைத்திருந்தார்.

 புதிய சாதனை

புதிய சாதனை

பராக் ஒபாமா 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 6 கோடியே 94 லட்சத்து 56 ஆயிரத்து 897 வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்திருந்தார். தற்போது அதை முறியடித்து விட்டார் ஜோ பிடன்.. பராக் ஒபாமாவும் ஜனநாயக கட்சி வேட்பாளர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரகாசம்

பிரகாசம்

பிடனை விட 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்று பின் தங்கிப் போய்க் கொண்டிருக்கிறார் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்.. அவரால் வெற்றி பெறுவது இயலாத காரியம் என்று சொல்கிறார்கள்.. பிடனுக்கு மேலும் வாக்குகள் கூடிக் கொண்டே போகிறது என்பதால் அவரது சாதனை இமாலய சாதனையாக மாறும் வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது.

ஹில்லாரி

ஹில்லாரி

அதிபர் தேர்தலில் வெற்றி பெறத் தேவையான எலக்டோரல் வாக்குகளையும் கண்டிப்பாக பிடன் பெற்று விடுவார் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்... இதில் இன்னொரு விசேஷமும் உள்ளது... டிரம்ப் கடந்த 2016ம் ஆண்டு வெற்றி பெற்றபோது அவருக்கு மக்கள் அளித்த வாக்குகளை விட எலக்டோரல் வாக்குகள்தான் அதிகம் கிடைத்தது. ஹில்லாரிதான் அதிக மக்கள் வாக்குகளை பெற்றார். தற்போது 2வது முறையாக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Biden breaks record with most votes won by any presidential candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X