வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகரிக்கும் மக்கள் ஆதரவு.. டிரம்ப் 4 ஆண்டுகளில் பெற்றதை.. முதல் வாரத்திலேயே ஓவர்டேக் செய்த பைடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டிரம்ப் தனது ஆட்சிக் காலம் முழுக்க பெற்ற மக்களின் ஆதரவை விட, புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் பைடன் ஒரே வாரத்தில் அதிக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்,

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், டிரம்பை தோற்கடித்தார். கடந்த 25 ஆண்டுகளில் அதிபர் பதவியிலுள்ள ஒருவர் தேர்தலில் தோற்பது இதுவே முதல்முறையாகும்.

அதைத்தொடர்ந்து ஜோ பைடன் கடந்த வாரம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றது முதலே பைடன் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். டிரம்ப் நிர்வாகத்தின் பெரும்பாலான முடிவுகளை ரத்து செய்து வருகிறார்.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

இந்நிலையில், மோன்மவுத் பல்கலைக்கழகம் சார்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் சுமார் 54% அமெரிக்கர்கள் பைடன் சிறப்பாகச் செயல்படுவதாக, அவரது செயல்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். வெறும் 30% பேர் மட்டுமே பைடனின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல மார்னிங் கன்செல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் பைடனின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 56% பேரும் சிறப்பாக இல்லை என 34% பேரும் தெரிவித்துள்ளனர். அதேபோல ஹில்-ஹாரிஸ்எக்ஸ் கருத்துக் கணிப்பில் 63% பைடனுக்கு ஆதரவாகவே கருத்தை தெரிவித்துள்ளனர்.

கட்சி ரீதியான ஆதரவு

கட்சி ரீதியான ஆதரவு

இருப்பினும், கட்சி சாராத நபர்களின் ஆதரவு பைடனுக்கு சற்று குறைவாகவே உள்ளது. மோன்மவுத் கருத்துக்கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சியின் 90% பேர் பைடனுக்கு ஆதரவளிக்கின்றனர். அதேநேரம் குடியரசு கட்சியின் 15% பேரும், கட்சி சாராதவர்களில் வெறும் 47% பேரும் மட்டுமே பைடன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், ஒட்டுமொத்தமாக பைடனுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், மக்களின் எண்ண ஓட்டத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என்ற பிளவு பெரிதாகவே உள்ளது.

டிரம்பை விட அதிகம்

டிரம்பை விட அதிகம்

பைடனுக்கு தற்போது கிடைத்துள்ள மக்களின் ஆதரவு என்பது டிரம்பிற்கு ஒட்டுமொத்தமாக அதிபர் காலத்தில் கிடைத்த ஆதரவைவிட அதிகமாகும். டிரம்ப் அதிபராக இருந்த போது, அவருக்குச் சராசரியாக 40% பேர் மட்டுமே ஆதரவளித்திருந்தனர். இறுதிக் காலத்தில் வெறும் 34% மக்கள் மட்டுமே அவருக்கு ஆதரவளித்தனர். இதை தற்போது அசாட்லாக பைடன் ஓவர்டேக் செய்துவிட்டார்.

டிரம்பிற்குதான் மிக குறைவு

டிரம்பிற்குதான் மிக குறைவு

கடந்த 50 ஆண்டுகளிலேயே முதல் ஆறு மாதங்களில் மிக குறைந்த மக்கள் ஆதரவைப் பெற்றவர் என்ற மோசமான சாதனைக்கும் டிரம்பே சொந்தக்காரர். முதல் ஆறு மாதங்களில் ஒபாமாவுக்கு 60% மக்கள் ஆதரவு இருந்தது. அதேபோல ஜார்ஜ் புஷ்க்கு 53.9% மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், டிரம்பிற்கு முதல் ஆறு மாதங்கள் கூட வெறும் 41.4% மக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
US President Joe Biden has a higher approval rating after one week in office than Donald Trump did in his entire presidency, a new poll found Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X