வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவரெல்லாம் வராம இருக்கறதே நல்லதுதான்... பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்துகொள்ளாதது குறித்து பைடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தான் பதவியேற்கும் விழாவில் அதிபர் டிரம்ப் பங்கேற்காமல் இருப்பதே நல்லது தான் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.

அதேபோல அவருடன் இணைந்து கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்கவுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெயரையும் அவர் பெற்றார்.

 அமெரிக்க வன்முறை

அமெரிக்க வன்முறை

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை முறைப்படி தேர்ந்தெடுக்கும் நிகழ்வின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குப் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காவலர் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை அதிபர் டிரம்ப்பே தூண்டியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 அவர் வராதது நல்லது

அவர் வராதது நல்லது

இந்நிலையில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பங்கேற்கும் நிகழ்வில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். தான் பதவியேற்கும் விழாவிற்கு டிரம்ப் வராமல் இருப்பதே நல்லது என்று ஜோ பைடன் கூறியுள்ளார். வரவிருக்கும் தனது அமைச்சரவையில் இடம்பெறவுள்ள நபர்கள் அறிமுகப்படுத்தும் விழாவில் பைடன் இதனைத் தெரிவித்தார். மேலும்,"அவர் குறித்து நான் நினைத்து வைத்திருந்த மோசமான நிலையைக் கூட அவர் மீறிவிட்டார். அவர் நாட்டிற்கே ஒரு சங்கடம், உலகத்திற்கு முன் அமெரிக்காவுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். அவர் அதிபர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்" என்றார்.

 அவர் வருவது பெருமை

அவர் வருவது பெருமை

பதவியேற்பு விழாவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து பைடன் கூறுகையில், "அவர் வரவேற்கப்படுகிறார். எப்போதும் புதிய அதிபர் பதவியேற்கும்போது பழைய அரசிலிருந்து முக்கிய நபர்கள் அதில் இருப்பார்கள். எனவே துணை அதிபர் மைக் பென்ஸ் வருவது வரவேற்கத்தக்கது. அவரது வருகை எங்களுக்குப் பெருமை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

 பதவி நீக்கம்

பதவி நீக்கம்

சட்டப்பிரிவு 35ஐ பயன்படுத்தி அதிபர் டிரம்பை வரும் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே பதவி நீக்கம் செய்ய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயன்று வருகின்றனர். இது குறித்து அவருக்கு எதிரான தீர்மானம் வரும் திங்கட்கிழமை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பைடன் கூறுகையில், "அமெரிக்க வரலாற்றில் மிகவும் திறமையற்ற அதிபர்களில் ஒருவரான டிரம்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் பதவி நீக்கம் செய்ய விரும்புகின்றனர். நான் வரும் 20ஆம் தேதி பதவியேற்பதே டிரம்பை விரைவில் அப்பதவியிலிருந்து நீக்கும் வழி. அதற்கு முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றம் அவரை நீக்க என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்" என்றார்.

English summary
President-elect Joe Biden said President Donald Trump's decision to skip his inauguration is "one of the few things he and I have ever agreed on".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X