வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் சூப்பர் வைரஸ்.. 2018-லேயே கணித்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி

    வாஷிங்டன்: சீனாவில் உயிர் பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.

    இது வரை இந்த வைரஸ் பாதிப்பால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 2500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    கொரோனா படுத்தும்பாடு.. மருத்துவ கண்காணிப்பில் சீனா சென்று வந்த இரு பெங்களூர்வாசிகள் கொரோனா படுத்தும்பாடு.. மருத்துவ கண்காணிப்பில் சீனா சென்று வந்த இரு பெங்களூர்வாசிகள்

    சீனா

    சீனா

    இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் செவிலியர் ஒருவர் நேற்று பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் சீனா தவித்து வருகிறது. அந்நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்வோர் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    இந்தியாவில் ராஜஸ்தான், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த இருவருக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அது போல் சீனாவிலிருந்து பெங்களூர் வந்த இருவருக்கு கடுமையான சளித் தொல்லையால் அவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சூப்பர் வைரஸ்

    சூப்பர் வைரஸ்

    இந்த நிலையில் இது போன்ற நோய் வரும் என்பதை மைக்ரோ சாப்ட் நிறுவனர் முன்பே கணித்துள்ளார். ஆம், அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மசாசூட்ஸில் உள்ள மருத்துவ சங்க கருத்தரங்கில் இதை பில்கேட்ஸ் தெரிவித்தார். அந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில் இந்த உலகம் முழுவதும் விரைவில் பரவும் சூப்பர் வைரஸால் பாதிக்கப்படவுள்ளது.

    மக்களிடம் பதற்றம்

    மக்களிடம் பதற்றம்

    இந்த வைரஸ் நோய்க்கு முதல் 6 மாதங்களில் 3.30 கோடி பேர் பலியாகக் கூடும். அந்த வைரஸால் உலகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த வைரஸ் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களிடம் பதற்றத்தை குறைக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    English summary
    Microsoft Founder Bill Gates predicted about Corona virus in the year 2018.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X