வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மற்றொரு ஜார்ஜ் பிளாய்ட்.. கருப்பின வாலிபரை துளைத்த போலீஸ் குண்டுகள்.. அமெரிக்காவில் வெடித்த வன்முறை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் தாக்கப்பட்டு பலியான சோகம் மறைவதற்குள், மற்றொரு கருப்பின வாலிபர் போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

29 வயதாகும், ஜேக்கப் பிளேக் என்ற அந்த வாலிபரின் உடலை, வெள்ளைக்கார போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி குண்டு துளைத்து ஆபத்தான கட்டத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து, கெனோஷா நகரில் பெரும் போராட்டம் வெடித்து, அது வன்முறையாக உருமாறியுள்ளது.

இப்போது நீட், ஜேஇஇ தேர்வை நடத்துவது பணக்கார வீட்டு மாணவர்களுக்குத்தான் சாதகம்- சு.சாமி பொளேர் இப்போது நீட், ஜேஇஇ தேர்வை நடத்துவது பணக்கார வீட்டு மாணவர்களுக்குத்தான் சாதகம்- சு.சாமி பொளேர்

ஜார்ஜ் பிளாய்டு

ஜார்ஜ் பிளாய்டு

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்டு (46) என்ற கருப்பு இனத்தவர் கடந்த மே மாதம், வெள்ளை இன போலீஸ் அதிகாரியின் கால்களுக்கு கீழே சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 8 நிமிடங்கள், மூச்சு திணறுகிறது என்று அவர் கதறியதை கண்டுகொள்ளாமல், காலுக்கு கீழே வைத்து நசுக்கி கொன்றார் போலீஸ்காரர். இதையடுத்து பெரும் போராட்டங்கள் வெடித்தன.

குழந்தைகள் கண் எதிரில்

குழந்தைகள் கண் எதிரில்

இந்த சம்பவத்தின் வடு ஆறும் முன்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க நகரமான கெனோஷாவில் கருப்பினத்தைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஜேக்கப் பிளேக் சுடப்பட்டுள்ளார். தனது 3 குழந்தைகள் காரில் இருந்த நிலையில், ஜேக்கப்பும் காரில் ஏற முற்பட்டார். அப்போது பல ரவுண்டுகள் அவரை நோக்கி போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், ஒரு சில குண்டு, ஜேக்கப் உடலை துளைத்துள்ளது.

பெரிய பாதிப்பு

பெரிய பாதிப்பு

ஜேக்கப் பிளேக் முதுகெலும்பின் சில பகுதிகள் மற்றும் தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர், கை, கால்கள் செயலிழந்துள்ளன. அற்புதங்கள் நடந்தால்தான், ஜேக்கப் பிளேக் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

போராட்டம்

போராட்டம்

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, கெனோஷாவில் பெரும் போராட்டம், வன்முறைகள் வெடித்துள்ளன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியின்படி, போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்களாக போராட்டம் தொடர்ந்த நிலையில், நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் கைமீறிப் போவதால், விஸ்கான்சின் ஆளுநர் கெனோஷாவுக்கு அதிகமான தேசிய காவலர்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

English summary
Jacob Blake, 29, was shot several times opening the door of his car in Kenosha. At least one of the bullets went through his spinal cord, lawyers said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X