வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்:உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.32 லட்சமாகும்.

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,71,646 பேராகும்.

Brazil has 35,000 new cases in just one day

பலியானோர் எண்ணிக்கை 5.32 லட்சமாகும். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 64 லட்சமாகும். 44 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 58,530 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது. இங்கு 29,35,427 ஆக உள்ளது. அது போல் பலி எண்ணிக்கையும் 1.32 லட்சமாகியுள்ளது. பிரேசிலில் 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது. ரஷ்யாவில் 6.74 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலியானோர் எண்ணிக்கை 10,027 ஆகும்.

சென்னை.. 6ம் தேதி முதல் புதிய தளர்வுகள்.. கட்டுப்பாடுகளுடன் கடைகள் இயங்கலாம்.. முதல்வர் சென்னை.. 6ம் தேதி முதல் புதிய தளர்வுகள்.. கட்டுப்பாடுகளுடன் கடைகள் இயங்கலாம்.. முதல்வர்

இந்தியாவில் 6.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நேற்று ஒரே நாளில் 24,015 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலி எண்ணிக்கை 19,279 பேராகும். பெருவில் 2.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 10,412 பேர் பாதிக்கப்பட்டுளளார்கள்.

ஸ்பெயினில் 2.97 லட்சம் பேரும், சிலியில் 2.91 லட்சம் பேரும், பிரிட்டனில் 2.84 லட்சம் பேரும், மெக்சிகோவில் 2.45 லட்சம் பேரும், இத்தாலியில் 2.41 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Recommended Video

    புதிய நோயாளிகள் எண்ணிக்கை... உலக அளவில் இந்தியாவுக்கு 4வது இடம்

    English summary
    Brazil has 35,000 new cases in just one day. 1.13 crores were infected globally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X