• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு

|

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் போல்சனாரோ, இந்தியா அனுப்பி வைத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு, மிகவும் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருந்தாலும், மக்கள் சமூக விலகல் பின்பற்ற வேண்டாம், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர் போல்சோனாரோ.

இது வெறும் சளிக் காய்ச்சல் என்றும் கூறினார். மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு, இந்தியா அனுப்ப சம்மதித்தபோது, அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்று லட்சுமணனை காப்பாற்றியது போல இந்திய பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று புகழ்ந்துரைத்தார்.

ஆரம்பத்திலேயே விழித்துக் கொண்ட நியூசிலாந்து.. கொரோனா போரில் வெற்றி.. குவியும் பாராட்டு!

பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர்

இந்த நிலையில், கடந்த சில தினங்கள் முன்பு பிரேசில் அதிபருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல் முறையாக முகக் கவசம் அணிந்தபடி செய்தியாளர்களிடம் இந்த தகவலை அவர் கூறினார். பிறகு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

பேஸ்புக் வீடியோ

பேஸ்புக் வீடியோ

இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தபடி பேஸ்புக் லைவ் மூலம், மக்களுடன் உரையாடினார் போல்சனாரோ. தான் "மிகவும் நன்றாக" இருப்பதாக அப்போது கூறினார். மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தி வருவதாகவும், அதனால் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் கூறினார், 65 வயதான போல்சனாரோ.

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

மலேரியாவை குணப்படுத்தும் இந்த மாத்திரை, கொரொனா சிகிச்சைக்காக சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பிரேசில் அதிபர் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்த மாத்திரை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால் அதன் செயல்திறன் இன்னும் முறையாக நிரூபிக்கப்படவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

"நான் (ஹைட்ராக்ஸி குளோரோகுயின்) எடுத்துக்கொண்டேன், அது வேலை செய்தது, நான் நன்றாக இருக்கிறேன், கடவுளுக்கு நன்றி. அதை விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாற்று மருந்தை வழங்கட்டும்." என்று பிரேசில் அதிபர் தனது வீடியோவில் தெரிவித்தார். ஆனால் மக்கள் தாங்களாகவே இந்த மருந்தை சாப்பிட இந்த வீடியோ உத்வேகம் அளித்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

  Corona Medicine : 'அவசரகால பயன்பாட்டிற்காக' Itolizumab மருந்து | Oneindia Tamil
  பக்க விளைவுகள்

  பக்க விளைவுகள்

  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை, இதய பலஹீனம் உள்ளிட்ட, பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ உலகம் எச்சரித்துள்ளது. எனவே, பிரேசில் அதிபரின் இந்த வீடியோ விமர்சனங்களை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Brazilian President Jair Bolsonaro, who has tested positive for COVID-19, said on Facebook Thursday that he was "very well" and again advocated the use of the controversial drug hydroxychloroquine.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more