வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஸ்ட்லி பர்ஸ் நாலு.. அப்றம் ஒரு சூப்பர் கார்.. முடிஞ்சா தரை டைல்ஸ்.. மணப்பெண் போட்ட கிப்ட் கண்டிஷன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தன் திருமணத்திற்கு மணப்பெண் போட்ட கிப்ட் கண்டிஷன்- வீடியோ

    வாஷிங்டன்: திருமணத்துக்கு வாங்க என அழைப்பது வழக்கம். ஆனால் இந்த கிப்ட்களுடன் இந்த விலையில் இருந்தால் மட்டும் வாங்க என அடித்து பிடுங்காத குறையாக கேட்கும் மணப்பெண்ணை பார்த்துள்ளீர்களா?

    திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளும் அவர்தம் உறவினர்களும் தங்கள் திருமணத்துக்கு அனைவரும் வரவேண்டும் என விரும்புவது வழக்கம். மேலும் பரிசுப் பொருட்களை கொண்டு வந்தால் அதுபோல் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு தாமும் பரிசு கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    இதனால் சிலர் பரிசுப் பொருள்கள் கூடாது என்றே தங்களது அழைப்பிதழில் அச்சிடுவர். இது போல் வாக்கியம் இல்லாவிட்டால் அவரவர் வசதிக்கேற்ப பொன் நகை முதல் ரூ 100 வரை தங்களால் இயன்ற பொருளை தம்பதிக்கு பரிசாக அளிப்பர்.

    பட்டியல்

    பட்டியல்

    ஆனால் இதுதான் பரிசாக வேண்டும், இத்தனை ரூபாயில் பரிசு வேண்டும் என யாராவது கேட்டு பார்த்துள்ளீர்கள். ஆம். மணப்பெண் ஒருவர் தனது பேஸ்புக்கில் எந்தெந்த பொருட்கள் வேண்டும் என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    கிப்ட் வாங்குவதற்கு

    கிப்ட் வாங்குவதற்கு

    அதில் தான் பட்டியலிட்டுள்ள கிப்ட்களையோ அல்லது கிப்ட் வாங்குவதற்கு முன்னர் என்னிடம் ஆலோசனை கேட்கவோ வேண்டும் என்பது ஸ்டிரிக்ட் ஆர்டராகவே போட்டுள்ளார். அந்த வகையில் 10 பொருட்களை வரிசைப்படுத்தியுள்ளார். அதிலும் ஒரு லிங்கை கொடுத்து இதை கிளிக் செய்து தாங்கள் கொடுக்கும் பரிசுபொருளை இப்போதே தன்னிடம் அறிவித்து விட வேண்டும் என்றும் சகட்டுமேனிக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

    கரண்டி கிடையாது

    கரண்டி கிடையாது

    முதலாவது சமையல் அறை பொருட்கள். ஏதோ கரண்டியோ சமையல் கோட்டோ என நினைத்து விட வேண்டாம். மிக்ஸர், பிளண்டர் உள்ளிட்ட பொருட்கள்தான் வேண்டும். அவற்றின் விலை 350 டாலருக்கு மேல் இருக்க வேண்டும். இரண்டாவது பர்ஸ் ஐட்டம்ஸ். அதிலும் கூசி, லூயிஸ் வுயிட்டன் பர்ஸ்கள்தான் வேண்டும். இது கிடைக்கவில்லை என்றால் மற்ற பிராண்ட்களை வாங்குவதற்கு முன்னர் என்னிடம் கேட்க வேண்டும்.

    பிராண்டட்

    பிராண்டட்

    மூன்றாவது நல்ல பிராண்டட் ஆடைகள் 400 டாலர் விலைக்கு மேல் இருக்க வேண்டும். நான்காவதாக எங்கள் ஒட்டுமொத்த வீட்டுக்கே டைல்ஸ் வாங்கித் தரலாம் (பிறந்த வீட்டுக்கா, புகுந்த வீட்டுக்கா என குறிப்பிடவில்லை). 5-ஆவதாக புதிய கார் வாங்கித் தரலாம். கீழ்கண்ட கடைகளில் இருந்து கிப்ட் வவுச்சர் வேண்டும் என கூறி ஏராளமான பிராண்டட் கடைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

    ஏசியன்

    ஏசியன்

    கொரியன் அல்லது ஏசியன் அழகு சாதனப்பொருட்கள் 400 டாலர் அல்லது அதற்கு மேல். ஏதேனும் உயர்தர பெயின்டிங் அல்லது அலங்கார பொருட்கள் அவையும் 400 டாலர் அல்லது அதற்கு மேல். சரி இவற்றையெல்லாம் விட்டுவிட்டு பணமாக தர முன்வந்தால் அதுவும் 400 டாலர் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    மணப்பெண்

    மணப்பெண்

    ஏராளமான பொருட்களை ஐடியாவாக இங்கு கொடுத்துள்ளேன். எனவே திருமணத்திற்கு வாங்கும் பரிசு பொருளுக்கு ஒவ்வொருத்தரும் 400 டாலரையாவது செலவிட வேண்டும். அதை விட குறைந்த விலையான கிப்ட்களையும் ஏற்பேன். ஆனால் முன்கூட்டியே என்னிடம் கூறிவிடுங்கள் என அந்த மணப்பெண் தெரிவித்துள்ளார்.

    இந்திய மதிப்பில்

    இந்திய மதிப்பில்

    இதை பார்க்கும் நெட்டிசன்கள், யப்பா, தப்பித்தோம்டா சாமி.. இந்த பொண்ணு நமக்கு பிரண்டோ ரிலேட்டிவோ இல்லாமல் போனது யார் செய்த புண்ணியமோ. இது போல் இந்தியர்கள் யாராவது கேட்டிருந்தால் 400 டாலர் என்பது இன்றைய இந்திய மதிப்பில் 28 ஆயிரம்!.

    English summary
    Bride sends out wedding gift which expects to spend more than 300$ each in her facebook.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X