வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் தங்கச்சியை கடிக்க வர்றியா.. இப்ப வா பார்ப்போம்.. நாயுடன் போராடிய சிறுவன்.. முகத்தில் 90 தையல்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது தங்கையை நாயிடம் இருந்து காப்பாற்ற போராடிய 6 வயது சிறுவனின் முகத்தில் 90 தையல்கள் போடப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. நாயை கண்டு ஓடும் இந்த சின்னஞ்சிறிய வயதில் போராடிய சிறுவனின் பதிவு வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் வையோமிங் மாகாணத்தில் சயன் நகரில் வசித்து வருபவர் பிரிட்ஜர் வாக்கர்(6). இவரது தங்கையை ஒரு நாய் கடிக்க வருவதை கண்டார். உடனடியாக அதை தடுக்க முயன்றார். தங்கையை காத்து பாதுகாப்பு அரணாக இருந்தார்.

இதனால் பிரிட்ஜின் முகத்தில் படுகாயம் ஆனது. எனினும் பிரிட்ஜ் தனது தங்கையின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான். இதுகுறித்த புகைப்படத்தை பிரிட்ஜின் அத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

Fact Check: வோட்கா குடித்தால் கொரோனா ஓடிப்போகுமாம்.. வைரலாக சுற்றும் மெசேஜ்.. நம்பாதீங்க மக்களேFact Check: வோட்கா குடித்தால் கொரோனா ஓடிப்போகுமாம்.. வைரலாக சுற்றும் மெசேஜ்.. நம்பாதீங்க மக்களே

ஹீரோ

ஹீரோ

அவர் அதில் கூறுகையில் என் சகோதரரின் மகன் ஒரு ஹீரோ. நாயிடமிருந்து தனது தங்கையை காப்பாற்றியிருக்கிறான். தங்கையை காப்பாற்ற சென்று நாயிடம் அவன்தான் அதிகமாக அதன் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான். இதுகுறித்து கேட்ட போது அங்கு யாராவது இறந்த போக வேண்டும் என சூழல் இருந்திருந்தால் அது நானாக இருந்துவிட்டு போகலாம் என நினைத்தேன் என்றான்.

அவென்சர்ஸ்

அவென்சர்ஸ்

நேற்றுதான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். அவென்ஞர்ஸ் உள்பட ஹீரோக்களிடம் பிரிட்ஜின் சாகசத்தை கொண்டு சேர்க்க விரும்புகிறேன். அவர்களுக்கு துணையாக இன்னொரு நாயகன் பிரிட்ஜ் வந்துவிட்டான் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார் சிறுவனின் அத்தை.

சாகச கதை

சாகச கதை

இந்த சிறுவனின் சாகச கதையை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறுவனின் அத்தை ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹாலந்து, கிரிஷம்ஸ்வொர்த், ராபர்ட் டவுனி, மார்க் ரஃபல்லோ, சாட்விக் போஸ்மேன் உள்ளிட்டோருக்கு டேக் செய்துள்ளார். நாய் தாக்கியதில் பிரிட்ஜரின் முகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்ஜர்

பிரிட்ஜர்

அவருக்கு இதுவரை 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. எனினும் பிரிட்ஜர் நம்பிக்கையுடன் இருக்கிறார். பிரிட்ஜர் பற்றிய பதிவைப் ஷேர் செய்யும் ரஃபல்லோ, ஆன் ஹாத்வே உள்ளிட்டோர் சிறுவனின் துணிச்சலையும் பாராட்டியுள்ளார்கள். சிறுவனின் செயலை நெட்டிசன்களும் பாராட்டி வருகிறார்கள். சிறிய வயதில் தங்கையை காக்க கடுமையாக போராடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Brave Bridger 6 years old boy saved his sister from a dog attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X