வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்புடன் இணைந்து.. தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற எம்பி..பதவி விலக வேண்டும் என வலுக்கும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜார்ஜியே தேர்தல் முடிவுகளை டிரம்புடன் இணைந்து மாற்ற முயன்ற குடியரசு கட்சி எம்பி ஸ்காட் பெர்ரி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். இருப்பினும், டிரம்ப் தனது தோல்வியைக் கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை.

தேர்தலில் மிகப் பெரியளவில் முறைகேடு நடைபெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். மேலும், தேர்தல் முடிவுகளை மாற்றவும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது முதல் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். இருப்பினும், எதிலும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.

ஜார்ஜியா தேர்தல்

ஜார்ஜியா தேர்தல்

ஜார்ஜியா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை சில நாட்கள் வரை நீடித்தன. குறிப்பாக, ஜார்ஜியாவில் கடும் இழுபறிக்குப் பின், கடைசியாகவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு ஜோ பைடன் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் நெருக்கமாக இருந்ததால் ஜார்ஜிய தேர்தல் முடிவுகளையும் டிரம்ப் மாற்ற முயன்றார். அவருக்கு பென்சில்வேனியா மாகாண எம்பி ஸ்காட் பெர்ரி உதவியதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி

தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி

அதாவது, ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் சமயத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் பில் பார். இவர் தேர்தல் முடிந்தவுடன் சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவருக்குப் பின் ஜெஃப்ரி ரோசன் என்பவர் அட்டர்னி ஜெனரலின் பணிகளைக் கவனித்து வந்தார். இவர்கள் இருவருமே தேர்தல் மோசடி குறித்த டிரம்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆதரிக்க மறுத்தனர்.

டிரம்பிற்கு ஐடியா கொடுத்த பெர்ரி

டிரம்பிற்கு ஐடியா கொடுத்த பெர்ரி

இதனால் ஜெஃப்ரி ரோசனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ஜெஃப்ரி கிளார்க் என்பவரை அந்தப் பதவிக்கு நியமிக்கலாம் என்று டிரம்பிற்கு இந்த குடியரசு கட்சி எம்பி ஆலோசனை வழங்கியுள்ளார். டிரம்பின் தேர்தலில் மோசடி குற்றச்சாட்டை நம்புபவர்களில் ஒருவர்தான் ஜெஃப்ரி கிளார்க். முதலில் அவரை அட்டர்னி ஜெனரலாக நியமிக்க வேண்டும். அதன் பின் ஜார்ஜியா தேர்தல் குறித்து அவர் குற்றம்சாட்டுவார், இதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்று டிரம்பிற்கு ஸ்காட் பெர்ரி ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கான முயற்சிகளிலும் இருவரும் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

யார் இந்த ஸ்காட் பெர்ரி

யார் இந்த ஸ்காட் பெர்ரி

பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசு கட்சி எம்பி ஸ்காட் பெர்ரி. இவர் சுமார் 40 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தீவிர வலதுசாரி சிந்தனையாளரான இவர், 2012ஆம் ஆண்டு முதலில் எம்பியாக உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதலே டிரம்பின் ஆதரவு நிலைப்பாட்டை இவர் எடுத்துவிட்டார். டிரம்ப் கூறும் பொய்களை மக்களிடையே எடுத்துச் சென்றதில் இவரது பங்கும் முக்கியமானது.

சந்தேகம் தெரிவித்தவர்

சந்தேகம் தெரிவித்தவர்

கடந்த ஜனவரி 6ஆம் தேதி பைடன்-கமலா ஹாரிஸ் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, சில குடியரசு கட்சி எம்பிகள் தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்தனர். அவ்வாறு முதலில் சந்தேகம் தெரிவித்த எம்பிதான் இந்த ஸ்காட் பெர்ரி. ஜார்ஜியா தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு இதுவரை இவர் பதிலளிக்கவில்லை. மேலும், ஸ்காட் பெர்ரி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் அதிர்த்துள்ளது.

English summary
Calls are mounting for U.S. Rep. Scott Perry to resign after a report late Saturday exposed his "significant role" in trying to overturn the 2020 presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X