வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் கருப்பின பெண்.. முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரீஸ்.. பிரபலங்களின் பூரிப்பும், பாராட்டுகளும்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் துணை அதிபராக இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை நியமிப்பேன் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோபிடன் தெரிவித்துள்ளதை இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Recommended Video

    Kamala Harris-க்கு Trump பயப்பட காரணங்கள் | Oneindia Tamil

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவர் துணை அதிபராகவும் இருந்தவர். தற்போது தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரீஸை துணை அதிபராக நியமிப்பேன் என ஜோ பிடன் கூறியதற்கு பிரபலங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

    கமலா ஹாரிஸ்க்கு தமிழரான தன் அம்மாவையும், இட்லியையும் ரொம்ப பிடிக்குமாம்.. மலரும் நினைவுகள் கமலா ஹாரிஸ்க்கு தமிழரான தன் அம்மாவையும், இட்லியையும் ரொம்ப பிடிக்குமாம்.. மலரும் நினைவுகள்

    முதல் ஆசிய அமெரிக்க பெண்

    முதல் ஆசிய அமெரிக்க பெண்

    முதல் கருப்பின பெண்ணும், முதல் ஆசிய அமெரிக்க பெண்ணுமான கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக நியமித்தது வரலாற்று சாதனையாகும். இந்திய அமெரிக்க நடிகர்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளார்கள்.

    அதிபர் தேர்தல்

    அதிபர் தேர்தல்

    இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறுகையில் இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒட்டுமொத்த பெண்களையும் பெருமைப்படுத்துவதாகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக தேர்வான முதல் கருப்பின பெண் கமலா ஹாரீஸுக்கு எனது வாழ்த்துகள்.

    டிவி தொகுப்பாளினி

    டிவி தொகுப்பாளினி

    சமையல் கலைஞரும் டிவி தொகுப்பாளினியுமான பத்மா லட்சுமி கூறுகையில் கமலா ஹாரீஸ் தேர்வு என்பது மிகவும் வல்லமைமிக்கதாகும். ஓம் சாந்தி எப்படியோ இந்தியர் சார்பில் வெள்ளை மாளிகையை ஒரு பிரதிநிதி அலங்கரிக்க போகிறார். கமலா ஹாரீஸை தேர்வு செய்தது டிரம்ப், பென்ஸ், தற்போதைய அமைச்சரவை காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.

    கமலா ஹாரீஸ்

    கமலா ஹாரீஸ்

    இதுகுறித்து அமெரிக்க நடிகை ஜெஸி கேபியல் கூறுகையில் என்னா ஒரு வரலாற்று சாதனை. கருப்பின பெண்களுக்கான சாதனை, பெரிய கனவுகளுடன் உள்ள கருப்பின குழந்தைகளும், தாய்மார்களும் கமலா ஹாரீஸுக்காக பெருமிதம் கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Celebrities reacted to Kamala Harris being announced as Vice Presidential Candidate for the elections to be conducted in this November.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X