வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாசா நினைத்தால் அது நடக்கும்.. ஆனால்.. சந்திரயான் 2ல் அடுத்து என்ன ?

    வாஷிங்டன்: சந்திரயான் 2 விண்கலத்தால் கொண்டு செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலை என்னவென தெரியாமலும் அதனிடம் இருந்து சிக்னலை பெற முடியாமலும் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.

    விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் கடந்த 7-ஆம் தேதி தரையிறங்கியது. ஆனால் 400 மீட்டர் உயரத்தில் அந்த கருவி தரையிறங்கும்போது இஸ்ரோவிடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மனவேதனை அடைந்தனர்.

    நிலவில் 14 நாட்கள் சூரிய ஒளிப்படும், மற்ற 14 நாட்கள் இருள் சூழும் என்பதால் சூரிய ஒளியின் போதே விக்ரம் லேண்டர் குறித்த தகவல்களை பெற முயற்சித்து வருகின்றனர். இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இஸ்ரோவுடன் நாசாவும் கைகோர்த்து கொண்டுள்ளது.

    இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்ப நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் களம் இறக்கி விடப்பட்டுள்ளது. இந்த ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேன்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேல் வலம் வந்து அதை புகைப்படம் எடுக்கவுள்ளது. அப்பகுதியில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் தெளிவான படம் கிடைப்பது சிரமம் என்கிறார்கள். இருப்பினும் நாசாவின் ஆர்பிட்டர் ஏதாவது நல்ல செய்தியைத் தராதா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

    Newest First Oldest First
    2:39 PM, 17 Sep

    விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு மேல் நாசாவின் ஆர்பிட்டர் எப்போது சுற்றும் என்பது குறித்து தெரியவில்லை.
    2:27 PM, 17 Sep

    நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் கடந்த 2009ம் ஆண்டு முதல் நிலவைச் சுற்றி வருகிறது. பல்வேறு வகையான புகைப்படங்களையும், தகவல்களையும் அது அனுப்பி வைத்துள்ளது.
    2:26 PM, 17 Sep

    விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதியில் தற்போது சூரிய ஒளி குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ரீகனயசன்ஸ் எடுக்கப் போகும் படங்கள் தெளிவாக இருக்காது என்ற அச்சமும் உள்ளது. இருப்பினும் ஏதாவது நம்பிக்கை தரும் வகையிலான படத்தை அது அனுப்பலாம் என்ற நம்பிக்கையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.
    11:59 AM, 17 Sep

    சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டரை தேடுவதற்காக நாசாவின் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் கை கொடுக்கவுள்ளது. லேண்டருடனான இஸ்ரோவின் இணைப்பு கடந்த 7-ஆம் தேதி துண்டிக்கப்பட்டது. நாசாவின் ஆர்பிட்டர் சுற்றுவட்ட பாதையில் இருந்து கொண்டு லேண்டரை புகைப்படம் எடுக்கும்.

    Chandrayaan-2: Nasas lunar orbiter set to fly to take photos of lander
    English summary
    Breaking News Live: Nasa 's Lunar Orbiter to fly over Vikram lander which lost connection from ISRO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X