வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது? படங்களை வெளியிட்ட நாசா!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்பிட்டரிடமிருந்து குட் நியூஸ் வந்துள்ளது.. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி | Chandrayaan 2 | Isro Sivan

    வாஷிங்டன்: சந்திரயான் 2 விண்கலத்துடன், அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இன்று ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்துடன் விக்ரம் என்ற லேண்டர் மற்றும் அதற்குள் பிரக்யான் என்ற ஒரு ரோவர் அனுப்பப்பட்டது. இந்திய நேரப்படி இந்த மாதம் 7ம் தேதி அதிகாலை இந்த லேண்டர் சாஃப்ட் லேண்டிங் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் நிலவின் தரைப் பகுதியை நெருங்கியபோது திடீரென இஸ்ரோ தலைமையகத்தின் கட்டுப்பாட்டை லேண்டர் இழந்து விட்டது.

    ஆமாம்.. திமுகவிடம் பணம் வாங்கினோம்... இந்திய கம்யூ.டி.ராஜா ஒப்புதல்ஆமாம்.. திமுகவிடம் பணம் வாங்கினோம்... இந்திய கம்யூ.டி.ராஜா ஒப்புதல்

    ஆய்வு நடக்கிறது

    ஆய்வு நடக்கிறது

    விக்ரம் லேண்டர் கதி என்ன ஆயிற்று என்பது இன்னும் தெரியவில்லை. எதனால் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்பது தொடர்பாக தேசிய அளவிலான ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் முன்னணி விஞ்ஞானி ஆய்வு மையமான நாசா உதவியை இஸ்ரோ நாடி இருந்தது.

     ஹார்ட் லேண்டிங்

    ஹார்ட் லேண்டிங்

    இந்த நிலையில்தான் நாசா இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது: சந்திரயான் -2 லேண்டர், விக்ரம், செப்டம்பர் 7 (அமெரிக்காவில் செப்டம்பர் 6), சிம்பிலியஸ் என் மற்றும் மான்சினஸ் சி பள்ளங்களுக்கு இடையில் ஒரு சிறிய உயரமான மென்மையான சமவெளிகளில் தரையிறங்க முயன்றது.. விக்ரமுக்கு இது ஹார்ட் லேண்டிங்காக மாறிவிட்டது. லேண்டர் எங்கே உள்ளது என்பது கண்டறியப்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

    இருட்டான நேரம்

    செப்டம்பர் 17 ஆம் தேதி நாசாவின் Lunar Reconnaissance Orbiter (எல்.ஆர்.ஓ) மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டன. "படங்கள் இருட்டான நேரத்தில் எடுக்கப்பட்டன. எனவே நிழலில் லேண்டரை சரியாக படமாக்க முடியவில்லை. இதனால் விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்பதை, கண்டுபிடிக்க முடியவில்லை" என்று நாசா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. அக்டோபரில் சந்திரனின் சுற்றுப்பாதையிலிருந்து மீண்டும் லேண்டரைக் கண்டுபிடித்து படமாக்க எங்கள் விண்கலம் முயற்சிக்கும், அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும். இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

    14 நாட்கள்

    14 நாட்கள்

    விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்ஞான் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள். அந்த கெடு ஏற்கனவே கடந்து விட்டது. எனவே இனிமேல் அதனால் நமக்கு எந்த சிக்னலையும், தரமுடியாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று தனது பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Our NASA mission imaged the targeted landing site of India’s Chandrayaan-2 lander, Vikram. The images were taken at dusk, and the team was not able to locate the lander. More images will be taken in October during a flyby in favorable lighting, says Nasa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X