• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அபோகலைப்டிக்.." கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்..! உலகின் பாதி மக்கள் காலி.. பிரபல விஞ்ஞானி வார்னிங்

|

வாஷிங்டன்: சுமார் 4 லட்சம் மக்களை உலக அளவில் பலி எடுத்த, கொரோனா வைரஸை விட மோசமான வைரஸ், கோழிப் பண்ணைகளிலிருந்து பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பாதி மக்கள் தொகையை காலி செய்ய அந்த வைரசால் முடியும் என்கிறார் அந்த விஞ்ஞானி.

அந்த வைரஸ் பெயர் அபோகலைப்டிக் (apocalyptic) என்ற தகவலையும் விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். பிரபல புத்தக ஆசிரியரான அவர் பெயர், டாக்டர். மைக்கேல் கிரேகர்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நிலையில் அறிவியலாளரும், 'How Not To Die' என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் மைக்கேல் கிரேகர், இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா? முழு விவரம்

புதிய வகை வைரசாம்

புதிய வகை வைரசாம்

கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டாலும், உலகில் அடுத்த பெருந்தொற்று நோய் என்பது கோழிப் பண்ணைகளில் இருந்து தான் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பெயர்அபோகலைப்டிக் வைரஸ் ஆகும். கோழிப்பண்ணைகள் இருக்கும் வரை பெரும் தோற்று இருக்கத்தான் செய்யும் என்று அவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

சைவ உணவு பெஸ்ட்

சைவ உணவு பெஸ்ட்

கிரேகர் நீண்டகாலமாகவே, சைவ உணவுகள், காய்கறி உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை வலியுறுத்தி வருபவர். விலங்கு உணவு சாப்பிடுவது ஆபத்து என்று அவர் தொடர்ந்து கூறிவருகிறார். விலங்குகள், பறவைகளுடன் மனித இனம் நெருங்கி பழகும்போது, பெரும் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

புதிய புத்தகம்

புதிய புத்தகம்

‘How To Survive A Pandemic,' என்று அவர் எழுதியுள்ள அந்த புதிய புத்தகத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: H5NI பறவைக்காய்ச்சல் 1997 ஆம் ஆண்டு ஹாங்காங் நாட்டில் உருவானது. பல மில்லியன் கோழிகள் கொல்லப்பட்ட பிறகுதான் அந்த வைரஸ் ஒழிக்கப்பட்டது. 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான ப்ளூ காய்ச்சல் முழுமையாக ஒழிக்கப்பட முடியாத நிலையில்தான் உள்ளது. அவ்வப்போது தோன்றி மக்களை அச்சுறுத்துகிறது.

கோழி வளர்ப்பு முறை

கோழி வளர்ப்பு முறை

பண்ணைகளிலிருந்து வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கோழி வளர்ப்பு முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மிக நெருக்கமான பகுதிகளில் கோழிகள் அடைத்து வைக்கப்படுகிறது இப்போது வாடிக்கையாக இருக்கிறது. தங்கள் சிறகுகளை கூட அடித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையில் கோழிகள் அடைபட்டுக் கிடக்கின்றன.

சிறு பண்ணைகள் ஓகே

சிறு பண்ணைகள் ஓகே

அதிகப்படியாக, கோழி எச்சங்கள் சேரும் போது அதிலிருந்து நோய்க்கிருமிகள் உருவாகுகின்றன. எனவே கோழிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். சிறு சிறு பண்ணைகள் இருந்தால் பரவாயில்லை. போதிய அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும், உரிய சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும், இயற்கைக்கு மாறாக முட்டைகள் உருவாக்குவது, கோழி குஞ்சு பொரிப்பது போன்றவை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் தனது புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
A scientist Dr Michael Greger has warned that mass chicken farming could lead to a pandemic deadlier than COVID-19, wiping out half of the world’s population.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more