வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாடம் கற்காத சீனா.. வௌவால், எறும்பு திண்ணிகள், நாய்கள் இறைச்சி சந்தை மீண்டும் திறப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு காரணமானதாக கருதப்படும் வௌவால்கள, எறும்பு திண்ணிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் இறைச்சி சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்! - வீடியோ

    சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தைதான் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது, இங்கிருந்து பரவிய வைரஸ் உலகத்தையே நாசமாக்கி உள்ளது. சீனாவில் தொடங்கி அமெரிக்கா வரை பல லட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்ததுடன் சுமார் 42000 மக்களை இந்த கொரோனா வைரஸ் கொன்றுள்ளது.

    வுஹானில் வனவிலங்குகளை விற்கும் ஒரு கடல் உணவு சந்தையில் இருந்து தான் இந்த கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியதாக உலக சுகாதார அமைப்பு ஜனவரி 12 அன்று தெரிவித்து இருந்தது.

    சீனா பெருமிதம்

    சீனா பெருமிதம்

    டிசம்பரில் தொடங்கி தற்போது நான்கு மாதங்கள் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 25 முதல் சீனாவில் லாக்டவுன் திரும்ப பெறப்பட்டது. தற்போது முழுமையாக இயல்பு நிலை திரும்பிவிட்டது. பெய்ஜிங் உள்பட அனைத்து நகரங்களுமே இயல்பு நிலைக்கு வந்துவிட்டன. கொரோனாவுக்கு காரணமாக வுகானில் கூட இயல்பான போக்குவரத்து காணப்படுகிறது. வைரஸை வென்றுவிட்டதாக சீனா பெருமிதத்துடன் உள்ளது. பிரச்சனை முடிந்துவிட்டதாக சந்தோஷத்தில் உள்ளது.

    கடும் பாதிப்பு

    கடும் பாதிப்பு

    ஆனால் சீனாவை தவிர உலகின் அனைத்து நாடுகளுமே கொரோனா வைரஸை தடுக்க வழி தெரியாமல் திணறி வருகின்றன, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் மிக மோசமாக உள்ளது. அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளிலும் வுஹான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைக்கின்றனர். அவர்களின் உணவு பழக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    எறும்புதிண்ணிகள்

    எறும்புதிண்ணிகள்

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு காரணமானதாக கருதப்படும் வௌவால்கள, எறும்புதிண்ணிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் வனவிலங்கு சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் ஒரு வௌவாலிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவியது என்று விஞ்ஞானிகள் நம்புவதால் இந்த சந்தைகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்கள்.

    கொரோனா பாதிப்புக்கு காரணம்

    கொரோனா பாதிப்புக்கு காரணம்

    சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதான கடல் உணவு சந்தையைச் சேர்ந்த ஒரு பெண் மூலமே முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு காரணமானதாக கருதப்படும் வௌவால்கள, எறும்புதிண்ணிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் சந்தைகள், கடல் உணவு சந்தைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அப்படியே மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக அமெரிக்காவில் இருந்த வெளியாகும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    மீண்டும் விற்பனை

    மீண்டும் விற்பனை

    இருப்பினும், சந்தைகள் அனைத்தும் காவலர்களின் கண்காணிப்புக் கண்களின் கீழ் செயல்படுகின்றன. இருப்பினும் இறைச்சியாக வெட்டி விற்கப்படும் நாய்கள், மற்றும் முயல்கள் போன்ற கொல்லப்பட்ட விலங்குகளை யாரும் விற்பனை செய்வதில்லை. உயிருடன் மட்டுமே விற்கப்படுவதாக கூறப்படுகிறது. பல விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் சீனாவின் வனவிலங்கு சந்தைகளுக்கு தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் சீனா இப்போது மீண்டும் திறந்துள்ளதால் தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

    English summary
    China's "wet markets" have reopened - selling bats, pangolins and dogs for human consumption.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X