வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகிலேயே மிகப் பெரிய கடற்படையாக விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. எச்சரிக்கிறது அமெரிக்கா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகில் மிகப் பெரிய கடற்படையாக சீனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது என அமெரிக்கா எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Recommended Video

    சீனா உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு

    சீன ராணுவ திறன் குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு படை ஆண்டறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் அமெரிக்க பாதுகாப்பு படை கூறுகையில் உலகிலேயே சீனா மிகப் பெரிய கடற்படையை கொண்டுள்ளது. இது மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 350 கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 130 போர் கப்பல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    சீனாவுடன் அமெரிக்காவின் கடற்படையை ஒப்பிட்டால் சற்று குறைவுதான். அமெரிக்காவிடம் 293 கப்பல்கள் மட்டுமே உள்ளன. வரும் 2049-ஆம் ஆண்டு சீனா உலக தரம் வாய்ந்த ராணுவத்தை பெறுவதற்கான இலக்கை அடைவதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

    சுசூல் பதற்றம்... இந்திய துப்பாக்கிச் சூடு எல்லைக்குள்.... சீன ராணுவம்... பதட்டம்!! சுசூல் பதற்றம்... இந்திய துப்பாக்கிச் சூடு எல்லைக்குள்.... சீன ராணுவம்... பதட்டம்!!

    கப்பல் கட்டும் பணிகள்

    கப்பல் கட்டும் பணிகள்

    சீன கடற்படையின் அளவிற்கேற்க நவீனமயமான கப்பல் கட்டும் பணிகளை பற்றி கூறுவது முக்கியமானது. இது ஒரு நீண்ட கால சவால் ஆகும். ஒரே ஒரு அம்சத்தை வைத்து இதை வரையறுக்க முடியாது. மொத்த கப்பல்களின் எண்ணிக்கை, கப்பல்களின் கொள்ளளவு, இருப்பிடம், செயல்பாடுகள் உள்ளிட்ட பிற முக்கிய அம்சங்களை கொண்டு வரையறுக்கப்படுகிறது.

    கடல்

    கடல்

    இந்த பத்தாண்டுகளில் சீனாவின் போர்க் கப்பல்களின் எண்ணிக்கை 360 ஆக உயரும். மியான்மரிலிருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா வரை சாத்தியமாக உள்ள தளங்களை ஆராய்வதற்காக சீனா தனது தொலைதூர கடல்களில் சோதனை நடத்தி வருகிறது.

    அணு ஆயுதம்

    அணு ஆயுதம்

    உலகளாவிய சீன ராணுவ தளவாட நெட்வொர்க்கானது அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளில் தலையிடக் கூடும். அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவளிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகும்.

    நீர் மூழ்கி கப்பல்

    நீர் மூழ்கி கப்பல்

    சீனா தனது பெரும்பாலான நிதியை நீர் மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள், நவீன குண்டுகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கிறது. சீன ராணுவத்தினர் வேண்டுமானால் 10 அடி உயரம் இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களது நோக்கம் 10 அடி உயரத்தில் உள்ளது. சீனாவின் அணுசக்திகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Pentagon warns that China has the world's largest navy and it is getting better.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X