• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சீன அதிபரின் ரகசிய திபெத் விசிட்..இந்தியாவுக்கு வரும் நீரை தடுக்க மாஸ்டர் பிளான்..வெளியான பரபர தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய எல்லையில் பிரம்மபுத்ரா நதி மிகப் பெரிய அணை ஒன்றைக் கட்ட சீனா முயல்வதாகவும் அது குறித்து ஆய்வு செய்யவே சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த வாரம் திபெத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ள அமெரிக்க எம்பி டெவின் நூன்ஸ், இந்த அணையால் இந்தியாவுக்கு வரும் நீர் தடுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

  Tibet Border-ல் ஆய்வு செய்த Xi Jinping.. India-வுக்கு அச்சுறுத்தல்.. எச்சரிக்கும் US Congressman.

  இந்தியா சீனாவுக்கும் இடையே எல்லையில் பல ஆண்டுகளாகப் பிரச்சினை தொடர்வது அனைவருக்கும் தெரியும். இது கல்வான் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இன்னும் தீவிரமடைந்துள்ளது.

  மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல் மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்

  அதன் பின்னர் இரண்டு தரப்பில் இருந்தும் எல்லையில் வீரர்களைக் குவிக்கத் தொடங்கின. இதனால் எல்லையில் போர் உருவாகும் பதற்றம் உருவானது.

   எல்லை சிக்கல்

  எல்லை சிக்கல்

  எல்லையில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர இரு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தின. இருப்பினும், அதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எல்லையில் சில இடங்களில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை வாபஸ் பெற்றிருந்தாலும்கூட பெரும்பாலான இடங்களில் நிலைமை அப்படியே தான் நீடிகிறது.

   திடீர் பயணம்

  திடீர் பயணம்

  இந்தச் சூழலில் இந்தியா எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள கிழக்கு திபெத்தில் உள்ள நிங்சியில் கடந்த வாரம் புதன்கிழமை வந்த ஜி ஜின்பிங், வியாழக்கிழமை லாசாவுக்கு சென்று ஆய்வு நடத்தினார். இது முன் அறிவிக்கப்பட்டதாக ரகசிய ஆய்வாகவே இருந்துள்ளது. இந்தப் பயணம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் பற்றி அமெரிக்க எம்பி டெவின் நூன்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்,

   மிகப் பெரிய அணை

  மிகப் பெரிய அணை

  இது குறித்துக் குறித்து டெவின் நூன்ஸ் கூறுகையில், "கடந்த வாரம் தான், இந்திய எல்லையில் அமைந்துள்ள திபெத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் அவர் திபெத் நாட்டில் இது போன்ற ஆய்வுகளைச் செய்வது இதுதான் முதல்முறை. 100 கோடி மக்களையும் அணு ஆயுதங்களையும் கொண்டுள்ள இந்தியாவை எச்சரிக்கும் வகையிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது. எல்லையில் அவர் மிகப் பெரிய அணை ஒன்றைக் கட்ட திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு செல்லும் நீர் பெரியளவில் தடுக்கப்படும்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

   சீனா ஒப்புதல்

  சீனா ஒப்புதல்

  கடந்த வாரம் நைங்கி பகுதியில் நியாங் நதியை ஆய்வு செய்யச் சீன அதிபர் பிரம்மபுத்ரா நதியின் படுகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆய்வு செய்தார். பிரம்மபுத்ரா நதியில் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா அனுமதி அளித்துள்ளது. இது எல்லையில் அமைந்துள்ள பல இந்தியா, வங்கதேச மாநிலங்களுக்கு ஆபத்தைத் தரும் அபாயம் உள்ளது.

  அமெரிக்கா

  அமெரிக்கா

  இது பற்றி டெவின் நூன்ஸ் மேலும் கூறுகையில், "நீங்கள் எந்தளவு பொய் சொன்னாலும் சரி, எந்த விதமான பிரசராத்தை முன்னெடுத்தாலும் சரி, உண்மை என்று ஒன்று இருக்கிறது.அந்த உண்மை என்ன என அமெரிக்காவுக்குத் தெரியும், ஆனால் உண்மை இருக்கிறது. உண்மை சீன அதிபர் தனது இஷ்டத்துக்கு அனைத்தையும் செய்யத் தொடங்கிவிட்டார். அதற்கு அமெரிக்க அதிபரும்கூட எதுவும் பெரிதாக எதிர்விணையாற்றிதைப் போல தெரியிவ்லலை" என்றார்.

  English summary
  China this year approved plans to build a huge dam over the Brahmaputra river during the current 14th Five-Year Plan. US Congressman Devin Nunes said Chinese dictator, is threatening India, to build a big water project, possibly cut off water to India.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X