வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் வடக்கு 'லைன் ஆப் கன்ட்ரோல்' பகுதியில் படைகளை குவிக்கும் சீனா.. அமெரிக்கா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். சர்வாதிகார ஆட்சிகள் இந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றம்சாட்டினார்.

Recommended Video

    இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா - அமெரிக்கா குற்றச்சாட்டு

    லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள லைன் ஆப் கன்ட்ரோலின் பல பகுதிகளில் அண்மை காலமாக இந்தியா மற்றும் சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகின்றது.

    இரு நாடுகளும் படைகளை குவிப்பதால் இந்தியா -சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இரண்டு நாடுகளும் எல்லையில் தனித்தனி முகாம் அமைத்து செயல்படுவது பதற்றம் தனிய வாய்ப்பில்லாத நிலை உள்ளது. சீனா இந்தியா எல்லையில் தொடந்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்து வருகிறது.

    மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்! மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்!

    சீனா அத்துமீறல்

    சீனா அத்துமீறல்

    அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்திய சீன எல்லையில் நடப்பது குறித்து பேசுகையில் , "இன்றும் கூட இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். சீன கம்யூனிஸ்ட் அரசு, வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து உலகத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை மறைத்து தாமதப்படுத்தியது. இந்த அரசு தான் ஹாங்காங் மக்களின் அற்புதமான சுதந்திரங்களை அழிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    உலகிற்கே சீனாவால் பாதிப்பு

    உலகிற்கே சீனாவால் பாதிப்பு

    சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் நடந்தவற்றில் நான் சொன்னது இரண்டு விஷயங்கள் மட்டுமே. அறிவுசார் சொத்துக்களை திருடுவது, தென் சீனகடல் பகுதிகளில் அத்துமீறுவதை சீனா தொடர்ந்து செய்து வருகிறது. இவை அனைத்தும் சீனாவின் சர்வாதிகார ஆட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகள், அவை சீனாவில் உள்ள சீன மக்கள் மற்றும் ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங்கர்கள் மீது மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றார்.

    இந்தியாவை அச்சுறுத்துகிறது

    இந்தியாவை அச்சுறுத்துகிறது

    மைக் பாம்பியோ இந்திய எல்லையிலோ, அல்லது ஹாங்காங் அல்லது தென்சீனக் கடலிலோ சமீபத்திய சீன நடவடிக்கைகள் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது
    "சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கி வருகிறது. அவர்கள் சூழலை மிகத் தந்திரமாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது இந்திய எல்லை விவகாரத்திலும் சீனா அச்சுறுத்தும் விதமாகவே நடந்து வருகிறது. பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அதன் ராணுவக் கட்டமைப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் உருவாக்கி வருகிறார் அதிக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நான் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டேன். நீங்கள் தென் சீனக் கடலைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    ஒடுக்கும் அதிபர்

    ஒடுக்கும் அதிபர்

    சீனா ராணுவம் எங்கும் செல்லக்கூடிய வகையில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேற்கொள்கிறது. அத்துடன் சீன கடற்படை அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகெங்கிலும் துறைமுகங்களை உருவாக்க முயற்சிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டே வருகிறோம். மேலும் இராணுவ ரீதியாக விரிவாக்கங்களை செய்யும் முயற்சிகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக, இந்த விஷயங்களுக்கு உண்மையான வழியில் அமெரிக்கா பதிலளிக்கவில்லை. ஆனால், முதல் முறையாக சீனாவில் அச்சுறுத்தலை ஒடுக்கும் அதிபரை அமெரிக்கா தற்போது கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான எங்கள் ராணுவம், வலிமையான தேசப் பாதுகாப்புக் கட்டமைப்பு மூலம் அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். அதேபோல் எங்கள் நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறோம்.

    தென்சீனக் கடலில் அத்துமீறல்

    தென்சீனக் கடலில் அத்துமீறல்

    சீனா மேற்கத்திய சிந்தனைகளை, அதன் ஜனநாயகப் பண்பை அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கர்களின் வேலைகளைப் பறித்தல், வர்த்தக வழித்தடமான தென்சீனக் கடல் வழியைப் பயன்படுத்த அனுமதி மறுத்தல் என சீனாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளின் பட்டியல் அதிகம். கொரோனா வைரஸ் பரவல் ஏற்படத் தொடங்கிய சமயத்தில் தனது எல்லைகளை மூடிவிட்டு, தனது நாட்டினரை பிற நாடுகளுக்குப் பயணம் செல்ல அனுமதித்தது. அதனால்தான் மற்ற நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டது" என்றார்.

    English summary
    US Secretary of State Mike Pompeo said that China moved up its forces along the Line of Actual Control (LAC) with India. asserting that authoritarian regimes take these kinds of actions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X