• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தொடர்ந்து கட்டுப்பாடின்றி பூமியில் விழும் சீன ராக்கெட்டுகள்.. உடனடி ஆக்ஷன் தேவை.. அமெரிக்கா வார்னிங்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடு இல்லாமல் மாலத்தீவு அருகே விழுந்துள்ள நிலையில், சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடு இல்லாமல் திரும்புவது இது முதல்முறை இல்லை என்றும் இதைத் தடுக்க உடனடி நடவடிக்கையைச் சீனா எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Indian Ocean பகுதியில் விழுந்த China-வின் Rocket-ன் பாகம்.. உலக நாடுகள் கடும் விமர்சனம்

    சீனா விண்வெளியில் தியாங்காங் என்ற புதிய ஆய்வு நிலையம் ஒன்றை உருவாக்கத் தேவையான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்குத் தேவையான கருவிகளும் பொருட்களும் பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    அன்னையர் தினம்- தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினம்- தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா தனது லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம் விண்வெளி மையத்திற்குத் தேவையான பொருட்களை அனுப்பியது.

    விண்வெளியில் இருந்து திரும்பும் ராக்கெட்கள்

    விண்வெளியில் இருந்து திரும்பும் ராக்கெட்கள்

    பொதுவாக ராக்கெட் பல நிலைகளைக் கொண்டதாகவே இருக்கும். விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்களின் சில பகுதிகள் அதன் பணியை முடித்த பிறகு, பூமியில் ஆள் அரவமற்ற பகுதிகளில் விழுந்துவிடும். இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், எந்த இடத்தில் ராக்கெட் விழ வேண்டும் என்பதை அந்தந்த நாடுகள் தெளிவாக முடிவெடுக்கும். கடலில் மனிதர்கள் இல்லாத பகுதிகளிலேயே இதுபோன்ற ராக்கெட்கள் விழும்.

    கணிக்க முடியவில்லை

    கணிக்க முடியவில்லை

    ஆனால், இந்த முறை சீனா அனுப்பிய ராக்கெட்டின் பெரிய பூஸ்டர் பகுதி கட்டுப்பாடில்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது. சுமார் 18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பாகம் பூமியில் எங்கு விழும், இது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பவை பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. பல தரவுகள் இருந்தாலும், ராக்கெட் சரியாக எங்கு விழும் என்பதை அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களால் கூட கணிக்க முடியவில்லை. சீனா பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதே இதற்குக் காரணம் என நாசா விமர்சித்தது.

    எங்கே விழுந்தது

    எங்கே விழுந்தது

    இந்தச் சூழ்நிலையில், இந்த ராக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்துள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. மேலும் பூமியின் காற்று மண்டலத்துக்குள் இந்த ராக்கெட் பாகம் நுழையும்போது பெரும் பகுதி எரிந்துவிட்டது.

    முதல்முறை இல்லை

    முதல்முறை இல்லை

    சீனா தனது ராக்கெட் உதிரிப் பாகங்கள் இப்படி பூமியில் கட்டுப்பாடின்றி விழ விடுவது இது முதல்முறை இல்லை. சீனாவின் முக்கிய ஏவுதளங்களில் ஒன்றான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங் மையத்திலிருந்து அனுப்பப்படும் ராக்கெட்டுகள், வழக்கமாக அங்கு சுற்றியுள்ள கிராமப்புறங்களிலேயே விழும். இது அப்பகுதியில் சேதங்களையும் ஏற்படுத்தின. அதன் பின்னரே சீனா அதன் ராக்கெட்டுகளை ஹைனான் தீவிலிருந்து அனுப்பத் தொடங்கியது.

    உடனடி மாற்றம் தேவை

    உடனடி மாற்றம் தேவை

    கடந்த ஆண்டு, லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோதும், அது கட்டுப்பாடு இல்லாமல் பூமிக்குத் திரும்பியது. அதன் சில பகுதிகள் ஐவரி கோஸ்டில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்தது. அடுத்த சில ஆண்டுகள் சீனா தனது விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களை அதிகளவில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை இயக்கும் முறைகளில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    பெரும் பாதிப்பு

    பெரும் பாதிப்பு

    பொதுவாக, விண்வெளியில் இருந்து கட்டுப்பாடு இல்லாமல் விழுந்தாலும், மிக வேகமாக வருவதால் அதிகப்படியான வெப்பம் காரணமாக ராக்கெட்டின் பெரும்பகுதி வரும் வழியிலேயே எரிந்துவிடும். இருப்பினும், கட்டுப்பாடு இல்லாமல் விழுவதைத் தடுக்க சரியான நடவடிக்கையைச் சீனா எடுக்க வேண்டும் இல்லையென்றால் ராக்கெட் மக்கள் வசிக்கும் இடங்களில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    China rocket's free fall happened before
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X