• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வூஹான் மையத்தில் தோன்றிய கொரோனா.. சீனா பெரிய பொய் சொல்லியுள்ளது.. உலக சுகாதார மைய ஆலோசகர் பகீர்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரசின் தோற்றம் குறித்த உண்மைகளை மறைக்கச் சீனா மிகப் பெரிய ஒரு கவர்அப் ஆப்ரேசனை செய்துள்ளதாகவும் அது இப்போது வரை தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜெய்ம் மெட்ஸ்ல் தெரிவித்துள்ளார்.

  Coronavirus தோற்றம் குறித்து China பொய் சொல்லிருக்கு.. WHO ஆலோசகர் பகீர் தகவல்

  கடந்த 2 ஆண்டுகளாகவே உலகை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கொரோவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

  இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வல்லரசு நாடுகளால்கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்ததோ தவிர முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.

  கொரோனா தோற்றம்

  கொரோனா தோற்றம்

  மனிதக்குல வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளும் உருவாக்கப்பட்டன. இருப்பினும், கொரோனாவின் தோற்றம் பற்றி இன்னும்கூட அனைவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இதனைக் கண்டறியும் ஆய்வுகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் முதலில் வூஹான் வைராலஜி மையத்திலிருந்தே பரவியிருக்கும் எனச் சிலர் தெரிவித்தனர்.

  வூஹான் மையம்

  வூஹான் மையம்

  இருப்பினும் சர்வதேச அளவில் பலரும் அப்போது வூஹான் ஆய்வகம் குறித்து தகவலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல சீனாவுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களும் கொரோனா வைராஜி மையத்திலிருந்து பரவ வாய்ப்பு குறைவு என்றே கூறினர். இருப்பினும், வூஹான் ஆய்வு மையம் குறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கை மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

  கவர்அப் ஆப்ரேசன்

  கவர்அப் ஆப்ரேசன்

  இது குறித்து விசாரணை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இது பற்றி உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜெய்ம் மெட்ஸ்ல் கூறுகையில், இப்போது நமக்கு இருக்கும் பிரச்சினை ஒன்றுதான். கொரோனா தோற்றம் குறித்து உண்மையான தகவல்களை மூடி மறைக்கச் சீனா மிகப் பெரிய ஒரு கவர்அப் ஆப்ரேசனில் ஈடுபட்டுள்ளனர். உண்மையான தரவுகள் மாதிரிகளைச் சீனா மறைத்து வருகிறது. இது தான் முக்கிய பிரச்சினை.

  உரிய விசாரணை

  உரிய விசாரணை

  மேலும், சீன ஆராய்ச்சியாளர்களை உலகின் மற்ற ஆய்வாளர்கள் தொடர்பு கொள்ள முடியாமல் செய்துள்ளனர். அதேபோல கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களைச் சிறையில் தள்ளுகின்றனர். விலங்கிலிருந்து கொரோனா மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்பது நம்பும் வகையில் இல்லை. வூஹான் வைராலஜி ஆய்வு மையத்திலிருந்து கொரோனா தவறுதலாக வெளியுலகத்திற்கான ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும், உரிய விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையை நம்மால் கண்டறிய முடியும்.மேலும், சீன ஆராய்ச்சியாளர்களை உலகின் மற்ற ஆய்வாளர்கள் தொடர்பு கொள்ள முடியாமல் செய்துள்ளனர். அதேபோல கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களைச் சிறையில் தள்ளுகின்றனர். விலங்கிலிருந்து கொரோனா மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்பது நம்பும் வகையில் இல்லை. வூஹான் வைராலஜி ஆய்வு மையத்திலிருந்து கொரோனா தவறுதலாக வெளியுலகத்திற்கான ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும், உரிய விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையை நம்மால் கண்டறிய முடியும்.

  மாற்று வழிகள்

  மாற்று வழிகள்

  சீனா இதற்கு அனுமதி அளித்தால், அது மிகவும் நல்லது. அப்படி அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் உலக நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா மற்றொரு புதிய செயல்முறையை நாம் உருவாக்க வேண்டும். இந்த விசாரணைக்குச் சீனா ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலேயே உள்ளது.

  சீனா விரும்பவில்லை

  சீனா விரும்பவில்லை

  கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியிருக்கலாம் என்று விசாரணை மேற்கொள்ளச் சீனா விரும்பவில்லை என்றே தெரிகிறது. அல்லது கொரோனா எப்படிப் பரவியிருக்கும் என அவர்கள் ஏற்கனவே கண்டறிந்திருக்கலாம். ஆனால், உலகின் மிக மோசமான தொற்றை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா குறித்து நாம் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்" என்று அவர் தெரிவித்தார்.

  அமெரிக்கா & பிரிட்டன்

  அமெரிக்கா & பிரிட்டன்

  கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான அமெரிக்க புலனாய்வுத் துறை தகவலிலும் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே கொரோனா ஒத்த அறிகுறிகளுடன் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து பல ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பிரிட்டன் உளவுத் துறையும் இதே கருத்தை முன் வைத்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  The Chinese government is carrying out a “massive cover-up” of the true origins of the coronavirus World Health Organization advisory board member Jaime Metzl. He also says proper investigation needs to make to find the origin of Coronavirus
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X