வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்வான் மோதலில் கொல்லப்பட்ட சீன ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி என்ன? அமெரிக்க ஊடகங்கள் திடுக் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின்போது சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவலை அந்த நாடு தொடர்ந்து மறைத்து வருகிறது.

Recommended Video

    Galwan- ல் உயிரிழந்தது எத்தனை பேர்? உண்மையை மறைக்கும் China

    ஆனால் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீன அரசு அனுமதிக்கவில்லை என்பதால் மக்கள் கோபத்தில் உள்ளனராம்.

    ஜூன் மாதம் 15ஆம் தேதியே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எல்லையில், இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே கைகலப்பு மற்றும் கட்டையால் தாக்கி கொள்ளும் அளவிற்கு மோதல் உருவானது.

    பாமக அன்புமணி ராமதாஸ் கையில் அக்னி கலசம் டாட்டூ... புதிய அரசியல் உத்தியா?பாமக அன்புமணி ராமதாஸ் கையில் அக்னி கலசம் டாட்டூ... புதிய அரசியல் உத்தியா?

    சீன ராணுவத்தினர் பலி

    சீன ராணுவத்தினர் பலி

    இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதைவிட அதிகமாக சீன நாட்டு வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவுத்துறை, சீனா ராணுவத்தை சேர்ந்த சுமார் 35க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் சீனா இதுவரை பலி எண்ணிக்கை பற்றி வாய் திறக்கவில்லை. சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் கூட, சீனா வாய்மூடி மவுனம் காத்து வருகிறது.

    சீன அரசு கெடுபிடி

    சீன அரசு கெடுபிடி

    உயிர் இழப்பு மட்டுமல்ல. காயம் அடைந்தது எத்தனை பேர் என்பதை கூட அந்த நாடு தெரிவிக்கவில்லை என்பதும் சந்தேகத்தை அதிகரித்து வருகிறது.
    அமெரிக்காவை சேர்ந்த சில ஊடகங்கள் சீன ராணுவத்துக்கு நேர்ந்த பாதிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளன. அதில் உயிரிழந்த சீன ராணுவ வீரர்களின் உடல்களை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாம் என்று ராணுவ வீரர்கள் குடும்பத்தை சீன அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்க உளவுத்துறை

    அமெரிக்க உளவுத்துறை

    ராணுவ மரியாதை எதுவும் இல்லாமல், தொலை தூரத்தில் ஒரு இடத்தில் வைத்து தனித்தனியாக அவர்கள் உடல்களை அடக்கம் செய்யுமாறு அந்த நாட்டு அரசு ராணுவ வீரர்கள் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. யூஎஸ் நியூஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

    அதிருப்தி

    அதிருப்தி

    கொரோனா வைரஸ் பாதிப்பை காரணமாக வைத்து இதுபோல, உடல்களை அடக்கம் செய்யுமாறு ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை உலகத்திற்கு தெரிவித்து விடக்கூடாது என்ற மனநிலை தானாம். இது ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்று, அமெரிக்காவை சேர்ந்த ப்ரீட்பார்ட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    சமாதானம்

    சமாதானம்

    ராணுவ வீரர்கள் குடும்பத்தினரை சமாதானப்படுத்த சீன அரசு பெரும் முயற்சிகள் எடுத்துவருகிறது. வெய்போ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவின் இந்த செயல்பாடு அந்த நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

    English summary
    China is not willing to recognise the casualties it suffered in the Galwan valley clash.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X