வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா நிதியை நிறுத்தினால் என்ன.. பிடிங்க 30 மில்லியன் டாலர்.. WHOவிற்கு அள்ளி கொடுத்த சீனா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. நிதியுதவியை நிறுத்த உள்ளதாக, 'ஹூ'விற்கு நிதி வழங்கும் முதல் முக்கிய நாடான அமெரிக்கா கை விரித்த நிலையில், சீனா இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

China to give WHO US$30 million more after US freezes funds

சீன, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், இதுபற்றி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: ஏற்கனவே 20 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கிய நிலையில், கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது. இது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். சீனாவில் உருவான கொரோனா பரவியபோது, அந்த தீவிரத்தை உலக சுகாதார அமைப்பு மூடிமறைத்துவிட்டதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி இந்த நடவடிக்கையை அறிவித்தார்.

China to give WHO US$30 million more after US freezes funds

அமெரிக்கா அதிக நிதி கொடுத்தபோதிலும், உலக சுகாதார அமைப்பு சீனா சார்பாக நடந்து கொண்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டிரம்ப்பைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரை WHO க்கு வழங்கியது. அதே நேரத்தில் இதற்கு மாறாக, சீனா ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே பங்களித்தது.

சக்தி வாய்ந்த ஏவுகணைகள்.. சீன கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா போர் கப்பல்கள்.. பெரும் பதற்றம்! சக்தி வாய்ந்த ஏவுகணைகள்.. சீன கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா போர் கப்பல்கள்.. பெரும் பதற்றம்!

Recommended Video

    சீன கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா போர் கப்பல்கள்

    சீனாவின் நிலைமையை WHO துல்லியமாக மதிப்பிட்டிருந்தால், கொரோனா பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் என்பது ட்ரம்ப் ஆதங்கம்.

    இந்த நிலையில், சீனா 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன்வந்துள்ளதை வைத்து பார்த்தால், ட்ரம்ப் குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாமோ என்று, நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    English summary
    China announced on Thursday (Apr 23) it will give another US$30 million to the World Health Organization to help in the global fight against the coronavirus pandemic, days after Washington said it would freeze funding.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X