வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. எப்படிக் குத்திக் காட்றார் பாருங்க டிரம்ப்.. அதெப்படி அப்படி சொல்லலாம்.. கொந்தளித்த சீனா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் நோய்க்கிருமியை "சீன வைரஸ்" என்று குறிப்பிட்டதால் கடும் ஆத்திரம் அடைந்த சீனா இப்படி இனி அழைக்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

Recommended Video

    கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

    சீனாவின் வுகானில் தோன்றிய நோவல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் பரவிவிட்டது. இதுவரை 7000 பேர் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். சுமார் 160000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈரான், ஸ்பெயின்,தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    அப்பனே விநாயகா.. கொரோனா ஒழியனும்ப்பா.. மணக்குள விநாயகர் கோவிலில் மூலிகை சாம்பிராணி! அப்பனே விநாயகா.. கொரோனா ஒழியனும்ப்பா.. மணக்குள விநாயகர் கோவிலில் மூலிகை சாம்பிராணி!

    அமெரிக்காவும் தப்பவில்லை

    அமெரிக்காவும் தப்பவில்லை

    இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் யாருக்கும் பரவாது. இல்லாவிட்டால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவி விடும். வயதனாவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் பிழைப்பது கடினமாகிவிடும். மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேற்கத்திய நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    சீனா குற்றச்சாட்டு

    சீனா குற்றச்சாட்டு

    இதனிடையே கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்கா தான் என்று சீன வெளியுறவுத்துறை அதிகாரி அண்மையில் பேசி அதிரவைத்தார். இதை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்கா, சீன தூதரை அழைத்து கண்டித்தது.அத்துடன் சீன அரசின் உயர் அதிகாரிகளுக்கும் தொலைப்பேசியில் அழைத்து அமெரிக்கா தரரப்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.

    டிரம்ப் போட்ட டுவிட்

    டிரம்ப் போட்ட டுவிட்

    இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நேற்று டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், "சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விமானசேவை மற்றும் பிற தொழில்களுக்கு தொழில்களுக்கு அமெரிக்கா சக்திவாய்ந்த முறையில் ஆதரிக்கும்" என்று டிவிட் செய்தார். டிரம்ப் இந்த டுவிட் மூலம் கொரோனா வைரஸை நாங்கள் பரப்பவிலலை. சீனாவில் இருந்து தான் உலகிற்கு பரவி உள்ளது என்ற அர்த்தத்தை பதிய வைக்க முயன்றுள்ளார்.

    வுகான் வைரஸ்

    வுகான் வைரஸ்

    முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தான் இந்த கொரோனா தொற்று நோயை முதன்முதலாக "வுகான் வைரஸ்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ட்வீட் மூலம் டிரம்பும் சீன வைரஸ் என்று கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்கா தான் கொரோனாவை பரப்பி வந்தது என்று சீனா கூறி வரும் நிலையில், இப்படி அமெரிக்காவில் உள்ள பல அரசியல்வாதிகளும் சீன வைரஸ் என கொரோனா வைரஸை குறிப்பிடுவதை கண்டு சீனா கொதித்து போய் உள்ளது. இனி சைனிஸ் வைரஸ் என சொல்வதை உடனே நிறுத்துங்கள் என்று கடுமையாக கோபப்பட்டுள்ளது.

    களங்கப்படுத்த கூடாது

    களங்கப்படுத்த கூடாது

    சீன வெளியுறவுத்துறை தலைவர் யாங் ஜீச்சி கூறுகையில், சில அமெரிக்க அரசியல்வாதிகள் சீனா மற்றும் அதன் தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளை அடிக்கடி அவதூறாகப் பேசியதாகவும், நாட்டைக் களங்கப்படுத்தியதாகவும், இது சீன மக்களை கோபப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் தவறான நடத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சீனாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் அவர் வலியுறுத்தினார். சீன வைரஸ் என்று அழைத்தால் அமெரிக்காவில் இனவெறியை தூண்டி ஆசிய-அமெரிக்க சமூகத்திற்கு எதிராக பிளவை உண்டாக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    English summary
    "Chinese Virus," Says Trump Amid china issued a "stern warning to the United States that any scheme to smear China will be doomed to fail"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X