வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை சீனா மூடி மறைத்தது.. உண்மையை சொன்னால் கொன்றுவிடுவார்கள்.. சீன பெண் விஞ்ஞானி கதறல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலை சீனா மறைத்ததாக, அந்த நாட்டின் வைராலஜி பெண் விஞ்ஞானி, லி-மெங் யான் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    America-வில் அடைக்கலம் புகுந்த China பெண் விஞ்ஞானி | Accusing China of corona cover-up

    ஹாங்காங் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர் லி-மெங் யான், சீன நாடு, கொரோனா வைரஸ் பரவலை மூடிமறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    சீன அரசுக்கு முதலிலேயே இந்த கொடிய வைரஸ் பற்றித் தெரியும் என்றும், WHO ஆலோசகர் பேராசிரியர் மாலிக் பீரிஸ் இது தெரிந்தும், இந்த விஷயத்தில் அமைதி காத்தார் என்றும் குற்றம் சாட்டினார்.

    இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்புஇந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு

    தனிப்பட்ட பேட்டி

    தனிப்பட்ட பேட்டி

    அமெரிக்கா தப்பிச் சென்ற லி-மெங் யான், இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல், ஃபாக்ஸ் நியூஸுக்கு ஒரு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை முதலிலேயே சீன அரசாங்கம் அறிந்திருப்பதாக நான் நம்புகிறேன்.

    ஆரம்பத்தில்

    ஆரம்பத்தில்

    இந்த துறையில் சில சிறந்த வல்லுநர்களான எனது மேற்பார்வையாளர்கள், தொற்றுநோய்களின் தொடக்கத்தில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சியை புறக்கணித்தனர். அப்போது கவனம் செலுத்தியிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

    மனிதர்களிடையே பரவும் என முதலிலேயே தெரியும்

    மனிதர்களிடையே பரவும் என முதலிலேயே தெரியும்

    சீனா எனது நற்பெயரை அழிக்க முயற்சிக்கிறது. சீனாவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் விஞ்ஞானி நண்பரால், டிசம்பர் 31 ம் தேதி மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீனா அல்லது WHO அத்தகைய பரவலைப் பற்றி ஒப்புக்கொள்ளவேயில்லை.

    உடனடியாக பரவாது என கூறிவிட்டனர்

    உடனடியாக பரவாது என கூறிவிட்டனர்

    பின்னர் ஜனவரி 9 ஆம் தேதி, WHO அறிக்கை வெளியிட்டது. சீன அதிகாரிகளின் கருத்துப்படி குறிப்பிட்ட புதிய வகை வைரஸ், சில நோயாளிகளுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும், மேலும் மக்களிடையே உடனடியாக பரவுவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

    உயிரோடு இருக்க முடியாது

    உயிரோடு இருக்க முடியாது

    நான் மறுபடியும் சீனா போக முடியாது. எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மறுபடி பார்க்க முடியாது. ஏனெனில் சீனா சென்றால் நான் உயிரோடு இருக்க முடியாது. கொரோனா பற்றிய உண்மையை சொன்னதால்தான், உயிருக்கு பயந்து நான் அமெரிக்கா வந்துள்ளேன். இதையே நான் சீனாவிலிருந்தபடி கூறியிருந்தால், நான் மாயமாக்கப்பட்டிருப்பேன், கொல்லப்பட்டிருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Accusing China of COVID-19 cover-up, Chinese virologist flees Hong Kong and claims WHO advisor knew about virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X