வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துறீங்களா.. ஊழியர்களை எச்சரித்த அமெரிக்காவின் சிஐஏ

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மலேரியா மருந்தை பயன்படுத்தலாம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட சிலர் கூறியிருந்தனர். ஆனால் இந்த மருந்தை உட்கொண்டால் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவின் சிஐஏ தனது ஊழியர்களை எச்சரித்துள்ளது.

Recommended Video

    55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா

    அது தொடர்பாக , தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கேள்விகளுடன் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ தனது ஊழியர்களுக்கான வலைத்தளத்தில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    CIA advised employees against using hydroxychloroquine for coronavirus

    அந்த அறிக்கையில் "இந்த கட்டத்தில் இந்த மருந்து (ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்) நோயாளிகள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை, மருத்துவ வல்லுநர்கள் தவிர, தற்போதைய விசாரணை ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே இதை பரிந்துரைக்கின்றனர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டால் திடீரன இருதயம் அடைத்து மரணம் ஏற்படும் அத்துடன் நோயாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் சில பக்க விளைவுகள் ஏற்படும்.

    எனவே இந்த மருந்தை, உட்கொள்ளும் விஷயத்தில் மருத்துவர்களின் ஆலோசனை மற்றம் கண்காணிப்பின் பேரில் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தலாமா என்று கேட்டத்திற்குத்தான் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் "தயவுசெய்து இந்த மருந்தை உங்கள் சொந்தமாகப் பெற வேண்டாம்" என்றும் இந்த மருந்து "COVID-19 வைரஸுக்கு எதிராக செயல்படுவதாக" ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாகவும் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்றும் 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது என்றும் கூறினார். இதை கேம் சேஞ்சர்" என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அதிக பக்க விளைவுகளை கொண்ட மருந்து என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    English summary
    The CIA advised employees that taking an anti-malarial drug as a potential treatment for coronavirus could have potentially dangerous side effects, including death
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X