வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மீது தாக்குதல் நடத்திய சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2017 ஆம் ஆண்டில் இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளுக்கு எதிராக கணினி வலையமைப்புகளில் சீனா தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் சீனா இந்த செயல்களை செய்து வருவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சீனா விண்வெளி ஆய்வுகள் நிறுவனம் (CASI) புதிய அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நிறுவனம் தான் சீனாவின் விண்வெளி விவரத்தை மற்றவர்களுக்கு வழங்கி வருகிறது,

அந்த நிறுவனம் வெளியிட்ட 142 பக்க அறிக்கையில், சீனாவால் ஏற்பட்ட சைபர் தாக்குதல்களை பெரும் அச்சுறுத்தல் என்று இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஒப்புக் கொண்டாலும், அதன் அமைப்புகள் இதுவரை சமரசம் செய்யப்படவில்லை என்று கூறுகிறது.

2012 மற்றும் 2018 க்கு இடையில், சீனா பல இணைய தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) மீது சீன நெட்வொர்க் அடிப்படையிலான கணினி தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது,

எல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா...டோக்லாம் பகுதியில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது!!எல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா...டோக்லாம் பகுதியில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது!!

இந்தியா கண்டுபிடிப்பு

இந்தியா கண்டுபிடிப்பு

இந்தியா, அதன் எதிர்-விண்வெளி திறன்களின் ஒரு பகுதியாக, 2019 மார்ச் 27 அன்று செயற்கைக்கோள் எதிர்ப்பு (ஏ-சட்) ஏவுகணை தொழில்நுட்பத்தை நிரூபித்தது, இது எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை அழிக்க இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

செயற்கைகோளுக்கு எதிரானது

செயற்கைகோளுக்கு எதிரானது

ஆனால் CASI யின் அறிக்கை, சீனாவின் பல எதிர்-விண்வெளி தொழில்நுட்பங்கள் எவ்வாறு எதிரி நாட்டு செயற்கைகோள்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பதை வெளிப்படுத்தி உள்ளது சீனாவின் தொழில்நுட்பங்கள், எதிரி விண்வெளி அமைப்புகளை தரையில் இருந்து புவியின் சுற்றுவட்டப்பாதையில் செல்லும் போதும் அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவை ஆகும். நேரடி-ஏற்றம் இயக்க-கொள்ளும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைகள், இணை-சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள், இயக்கிய-ஆற்றல் ஆயுதங்கள், ஜாமர்கள் மற்றும் இணைய திறன்கள் ஆகியவற்றை சீனா கொண்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

சீன ராணுவம்

சீன ராணுவம்

சமீபத்தில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் சீனா குறித்து கண்டுபிடித்த உண்மைகளையும் CASI அறிக்கையில் கூறியுள்ளது. இதன்படி "எதிரிகளை குருடர்களாகவும் காது கேளாதவர்களுக்காகவும்" பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை சீன ராணுவம் தொடர்ந்து பெற்று வளர்த்து வருவதாகக் கூறியுள்ளது.

எதை குறிவைக்கின்றன

எதை குறிவைக்கின்றன

"தரை, காற்று மற்றும் விண்வெளி அடிப்படையிலான ரேடியோ அதிர்வெண் ஜாமர்களை வளர்ப்பதில் சீனா அதிக முதலீடுகளைக் கொண்டுள்ளது, அவை விண்வெளி அமைப்புகளின் கட்டுப்பாடு அல்லது தரவு பரிமாற்றத்தில் ஈடுபடும் அப்லிங்க், டவுன்லிங்க் மற்றும் குறுக்கு இணைப்புகளை குறிவைக்கின்றன என்று அறிக்கையில் கூறியுள்ளது.

சீனர்கள் முயற்சி

சீனர்கள் முயற்சி

இதனிடையே பல ஆண்டுகளாக இணைய தாக்குதல்களின் ஆதாரங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம் விஞ்ஞானிகளுக்கு உள்ளது. . "சைபர் அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது., ஆனால் இதுபோன்ற தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. எச்சரிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம், நாங்கள் எப்போதுமே சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று நான் நினைக்கவில்லை. சீனர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கலாம். " என்று மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

சைபர் அச்சுறுத்தல்கள்

சைபர் அச்சுறுத்தல்கள்

இஸ்ரோ தலைவர் கே சிவன் இந்திய விண்வெளி நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று மறுத்தார். அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும், அது இந்தியாவுக்கு மட்டுமே இருப்பது இல்லை.. எனினும் இந்திய விண்வெளி அமைப்புகள் பாதுகாப்பாக உள்ளது "என்றார். இந்திய விண்வெளி அமைப்பு சுயாதீனமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது, இது இணையம் உட்பட பொது நெட்வொர்க்குடன் இணைக்கப்படவில்லை, இது அதன் அமைப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று இஸ்ரோ கூறியது.

English summary
"Computer network attack against Indian satellite communications in 2017” is one among a slew of counter-space activities carried out by China since 2007, listed in a new report by US-based China Aerospace Studies Institute (CASI).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X