வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Corona cases: கொரோனா பாதிப்பில் பிரிட்டன், இத்தாலியை முந்துகிறது பிரேசில்.. கவலையில் மக்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. மேலும் பிரிட்டன், இத்தாலியை விரைவில் பிரேசில் முந்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Recommended Video

    கொரோனாவுக்கு முடிவு எப்போது? வரலாறுகள் என்ன சொல்கின்றன?

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46.24 லட்சமாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3.08 லட்சமாக உள்ளது.

    இதுவரை 17 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 25 லட்சம் பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 45 ஆயிரம் பேரின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 14.84 லட்சமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 359 பேர்.. கடலூரில் ஆச்சர்யம் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 359 பேர்.. கடலூரில் ஆச்சர்யம்

    ஸ்பெயின்

    ஸ்பெயின்

    அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 88,507 ஆக உள்ளது. இங்கு இதுவரை 3.26 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஸ்பெயினில் 2.74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 27,549 பேர் பலியாகியுள்ளனர். அது போல் 1.88 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    பிரிட்டன்

    பிரிட்டன்

    ரஷ்யாவில் 2.62 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்லனர். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,418 பேராக உள்ளது. மருத்துவமனைகளில் 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரிட்டனில் 2.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,998 பேர் பலியாகிவிட்டனர். இத்தாலியில் 2.23 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 31,610 பேர் ஆவர். இதுவரை 1.20 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    பிரான்ஸ்

    பிரான்ஸ்

    பிரேசிலில் 2.18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 14, 817 பேர் பலியாகிவிட்டனர். இங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 84 ஆயிரமாகும். மருத்துவமனைகளில் 1.18 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 27,529 ஆகும்.

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர்

    ஜெர்மனியில் 1.75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 8 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர். 60 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். துருக்கில் 1.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,055 பேர் பலியாகிவிட்டனர். சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,933 ஆக உள்ளது. கனடாவில் 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 26,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Corona cases: Brazil is going to overtake Britain and Italy very soon. As there is shortage of medical equipments in Brazil led to increase.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X