வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ, பிரேசிலை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா.. கடும் பாதிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 20லட்சத்து 936 பேர் மரணம் அடைந்தனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 6கோடியே 81லட்சத்து 49 ஆயிரம் பேர் மீண்டனர். உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரம் பேர் சிசிக்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 2,44,76,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 168,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 1804 பேர் பலியாகினர். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 407,160 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஆய்வில் அஜாக்கிரதை... சீனாவிலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்..!கொரோனா வைரஸ் ஆய்வில் அஜாக்கிரதை... சீனாவிலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்..!

பாதிப்பு

பாதிப்பு

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் ஒரே நாளில் 38598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக 89,261 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 3,395,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 31,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,488,099 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் பலியாகி உள்ளதால் இதுவரை மொத்தம் 209,868 பேர் கொரோனாவால் பிரேசிலில் உயிரிழந்துள்ளனர்.

பலி அதிகம்

பலி அதிகம்

மெக்ஸிகோவில் ஒரே நாளில் 20,523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,630,258 உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக மெக்ஸிகோவில் ஒரே நாளில் 1,219 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 140,241 ஆக உயர்ந்துள்ளது.

குறைவு

குறைவு

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 13,962 பேருக்கு ஏற்பட்டதால் இதுவரை மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,572,672 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 145 பலியானதால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152,456 ஆக உயர்ந்துள்ளது.

English summary
Corona cases on the rise in the US, UK, Mexico and Brazil. Corona cases were confirmed for 168,853 people in a single day in US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X