வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உக்ரமாகும் கொரோனா.. செத்துமடியும் மக்கள்.. அமெரிக்கா, பிரேசில் இங்கிலாந்து, ஜெர்மனியில் ஷாக்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 2,643 பேர் கொரோனாவின் கொரத்தால் பலியாகி உள்ளனர். அமெரிக்கா மட்டுமின்றி, பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தினசரி இந்த நாடுகளில் பல்லாயிரம் பாதிக்கப்படுகிறார்கள்.

சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா ஓராண்டை கடந்து தீவிரமாக பரவி, பல உயிர்களை சாகடித்து வருகிறது. வீசும் காற்றை விஷம்போல் மாற்றி பரவும் இந்த கொடூர நோய் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகளைத் தாண்டி, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளையும் கொரோனா தொற்று அதிகமாகவே பாதித்து வருகிறது,.

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9,65,86,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 20,63,803 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,92,34,074 பேர் மீண்டுள்ளனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 2,52,88,871 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

இத்தாலி

இத்தாலி

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 24,797,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 1,05,96,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசலில் 85,75,742 பேரும், ரஷ்யாவில் 3,612,800 பேரும், இங்கிலாந்தில் 3,466,849 பேரும், பிரான்சில் 2,938,333 பேரும், இத்தாலியில் 2,400,598 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் கிடுகிடு

பிரேசிலில் கிடுகிடு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 162,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 34291 பேரும், இங்கிலாந்தில் 33355 பேரும், பிரான்சில் 23,608 பேரும், ரஷ்யாவில் 21,734 பேரும், கொலம்பியாவில் 15,939 பேரும், இந்தியாவில் 13,581 பேரும், ஜெர்மனியில் 12,159 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,643 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இங்கிலாந்தில் 1610 பேரும், பிரேசிலில் 1183 பேரும், ஜெர்மனியில் 1139 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர் தென் ஆப்ரிக்காவில் 839 பேரும், இத்தாலியில் 603 பேரும், ரஷ்யாவில் 586 பேரும், மெக்ஸிகோவில் 544 பேரும், பிரான்சில் 441 பேரும் கொரோனாவால் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

English summary
Not only in the United States, but also in Brazil, Spain, the United Kingdom, Germany, South Africa, and Italy, the number of corona cases has risen sharply in a single day. Tens of thousands are affected in these countries daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X