வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தீவிரமாக பரவுகிறது... இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினமும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1700க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Corona is spreading seriously ...No one should go to India - US warns

கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவை ரெட் லிஸ்டில் இணைத்துள்ளது இங்கிலாந்து. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்தியாவிற்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பல அமெரிக்கர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் 14,26,85,505 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 30,42,825 பேர் மரணம் உலகம் முழுவதும் 14,26,85,505 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 30,42,825 பேர் மரணம்

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்றாலும் தினசரி கொரோனா பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினசரியும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The US Immunization Control Agency has advised Americans to avoid traveling to India because of the rapid spread of Corono in India and that there is a high risk of contracting Corono if they go to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X