வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கொரோனா... 11.08 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.8 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.50 லட்சமாக அதிகரித்துள்ளது

சீனாவிலிருந்து பரவிய கொரோனா ஒரு ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை ஆட்டம் காண வைத்து வருகிறது. மேலும்,. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வேறு பரவி அச்சறுத்தி வருகிறது.

Corona plagues the world, 11.08 crore people infected

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.8 கோடி பேராக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 24.50 லட்சமாகும். அது போல் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8.57 கோடி பேராகும். அமெரிக்காவில் தொடந்து முதலிடத்தில் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு புதியதாக மேலும் 62,183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்த பாதிப்பு 28,516,005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,293 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 504,841 ஆக அதிகரித்து உள்ளது. இங்கிலாந்தில் புதிதாக 12,057 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. மேலும் 454 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் புதிதாக 51,350 பேருக்கு பாதிப்பும், மேலும் 1,432 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 13,447 பேருக்கு பாதிப்பும்,480 பேர் இறந்தும் உள்ளனர்.

வேலை வேண்டுமா... அப்போ கொரோனா தடுப்பூசி போட்டுக்கோ... வாடிகன் அரசு அதிரடி உத்தரவுவேலை வேண்டுமா... அப்போ கொரோனா தடுப்பூசி போட்டுக்கோ... வாடிகன் அரசு அதிரடி உத்தரவு

பிரான்சில் 22,501 பேருக்கும், இத்தாலியில் 13,762 பேருக்கும், துருக்கியில் 7,241 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்று பாதிப்பில் உலகளவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் புதிதாக 12,643 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 85 பேர் இறந்துள்ளனர்.

English summary
Worldwide, the number of corona victims has risen to 11.8 crore. The death toll from the corona has risen to 24.50 lakh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X