வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவை கலங்கவைத்த கொரோனா பலி.. ஐரோப்பா முழுவதும் மின்னல் வேகம்.. உலக நாடுகள் திகைப்பு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகிலேயே உச்சபட்சமாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,252 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 207,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகளில் கொரோனா மீண்டும் மின்னல்வேகத்தில் பரவி வருவது கவலையை அதிகரித்துள்ளது.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 668,32,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் உலகில் இதுவரை 15,33,741 பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,62,27,853 பேர் மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 19,071,331 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா டூ பிரிட்டன்.. விர்ருன்னு பறந்து போய்.. கொரோனா தடுப்பூசி போட்டுகிட்டு வரலாம்.. பரபர பேக்கேஜ்இந்தியா டூ பிரிட்டன்.. விர்ருன்னு பறந்து போய்.. கொரோனா தடுப்பூசி போட்டுகிட்டு வரலாம்.. பரபர பேக்கேஜ்

மொத்த பாதிப்பு

மொத்த பாதிப்பு

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் 149,81,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 96,44,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 6,577,177 பேரும், ரஷ்யாவில் 24,31,731 பேரும் பாதிக்கப்பட்டனர். பிரான்சில் 2,281,475 பேரும், இத்தாலியில் 1,709,991 பேரும், இங்கிலாந்தில் 1,705,971 பேரும், ஸ்பெயினில் 1,699,145 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா முதலிடம்

அமெரிக்கா முதலிடம்

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,07,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேலில் நேற்று ஒரே நாளில் 42,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில் 36,111 பேருக்கும், துருக்கியில் 31,896 பேருக்கும், ரஷ்யாவில் 28,782 பேருக்கும், இத்தாலியில் 21,052 பேருக்கும், ஜெர்மனியில் 17,812 பேருக்கும் ஒரே நாளில்கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் 2,252 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் 690 பேரும், இத்தாலியில் 662 பேரும், பிரேசிலில் 660 பேரும் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 508 பேரும், போலந்தில் 502 பேரும், இந்தியாவில் 480 பேரும், இங்கிலாந்தில் 397 பேரும் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர்.

எவ்வளவு பலி

எவ்வளவு பலி

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 287,825 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 176,641 பேரும், இந்தியாவில 140,216 பேரும் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் 108,863 பேரும், இங்கிலாந்தில் 61,014 பேரும், இத்தாலியில் 59,514 பேரும், பிரான்சில் 54,981 பேரும், ஈரானில் 50,016 பேரும் இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

English summary
Corona was confirmed for 619,151people in a single day yesterday in the world. A maximum of 207,170 people in the United States are affected by corona infection. Corona infection in India which affects 36,111 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X