வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா...கொரோனா தடுப்பு மருந்து... கட்டாயமில்லை... வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கட்டாயமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட மாட்டாது. ஆனால் குழந்தைகளுக்கு கட்டாயமாக இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அதிபரின் வெள்ளை மாளிகைக்கான கொரோனா தடுப்பு படையில் இடம் பெற்று இருக்கும் அதிகாரி ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Corona vaccine மக்களுக்கு இலவசமாக வழங்க திட்டம் - Australia PM அறிவிப்பு

    அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கு ஆண்டனி ஃபாசி அளித்திருந்த பேட்டியில், ''நீங்கள் யாரையும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது. நாங்கள் இதை ஒருபோதும் செய்வதில்லை. சுகாதார ஊழியர்களை கட்டாயப்படுத்தலாம் ஆனால், பொது மக்களை அவ்வாறு கட்டாயப்படுத்த முடியாது. உதாரணமாக தேசிய சுகாதார மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஃபுளூவுக்கான தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. இதை பொது மக்களுக்கு செயல்படுத்தவும் முடியாது. பொருத்தமானதும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

    Corona Vaccine is not mandatory in America says Health expert Anthony Fauci

    ஆனால், ஆஸ்திரேலியா ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை கட்டாயப்படுத்தியுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்து இருக்கும் தகவலில், ''ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அரசு கட்டாயப்படுத்தும்'' என்று தெரிவித்து இருந்தார்.

    அமெரிக்காவில் தொடர்ந்து தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வதற்கு எதிர் மறையான எண்ணங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கமும் மக்களை வற்புறுத்துவது இல்லை. பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவது இல்லை. இதனால்தான் இன்னும் தட்டம்மை போன்றவை அங்கு பரவலாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு ஏதாவது தளர்வு அறிவிக்குமா? - அரசு பதில் தர ஹைகோர்ட் அறிவுறுத்தல்விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு ஏதாவது தளர்வு அறிவிக்குமா? - அரசு பதில் தர ஹைகோர்ட் அறிவுறுத்தல்

    ஆனாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு லட்சக்கணக்கான கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஆர்டர் செய்துள்ளது. ஆறு மருந்து நிறுவனங்களுக்கு இந்த ஆர்டரை கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அதிபர் ட்ரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார்.

    English summary
    Corona Vaccine is not mandatory in America says Health expert Anthony Fauci
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X