வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி சோதனை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இறுதி கட்டத்தில் உள்ளது. சோதனைகளில் வெளியாகும் நல்ல முடிவுகளைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் பெரிய அளவிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

மேலும் பணக்கார நாடுகள் கொள்முதல் மற்றும் மருந்து ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் பெரும் போட்டி உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், 150 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது என்று அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம்அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம்

நாமதான் 3வது இடம்

நாமதான் 3வது இடம்

உலகிலேயே, கோவிட் -19 தடுப்பூசி டோஸ் கொள்முதல் உறுதிப்பாடு அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்த எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது.

மொத்த கொள்முதல்

மொத்த கொள்முதல்

இந்தியா 1.5 பில்லியனுக்கும் அதிகமான டோஸ் கொள்முதல் உறுதிப்படுத்தியுள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 1.2 பில்லியன் டோஸ் மற்றும் அமெரிக்காவின் 1 பில்லியன் டோஸ்களை விட அதிகம் ஆகும்.

 நிறைய டோஸ் போடுவாங்க

நிறைய டோஸ் போடுவாங்க

ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், ஒரே கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலோடு நிற்கவில்லை. பொட்டன்ஷியல் கொள்முதல் என்ற ஒரு பிரிவை அமெரிக்க நாளிதழ் காட்டுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தடுப்பூசியை அந்த நாடுகள் போடக்கூடும் என்பதை புள்ளி விவரம் காட்டுகிறது. எனவே அவை முதல் இரு இடங்களில் உள்ளன.

இந்தியா ரெடி

முதலில் தடுப்பூசி போடுவோரின் முன்னுரிமை பட்டியலை இந்தியா ஏற்கனவே தயாரித்து வருகிறது. ஒரு முழுமையான பயனுள்ள தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டவுடன், தேசிய நிபுணர் குழு பெரும்பாலான மக்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசியை கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபடும்.

English summary
The corona vaccine test is in its final stages in many countries of the world including India. Considering the good results that come out of the tests, many companies have started large-scale production.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X