வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது.

உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றன. இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,10,694 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 2,75,971 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus cases goes beyond 4 million in global level

மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. இங்கு 13,21,707 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பலி எண்ணிக்கை 78 ஆயிரமாக உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,23,578 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்தது ஸ்பெயினில் 2,60,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 26,299 ஆக உயர்ந்துள்ளது. இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,68,408 ஆனது. அது போல் இத்தாலியில் 2,17,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் பேர் இங்கு பலியாகியுள்ளனர்.

Recommended Video

    Coronavirus vaccine | சீனாவில் கொரோனாவிற்கு விரைவில் தடுப்பூசி... என்ன நடக்கும்?

    பிரிட்டனில் 187,859 ஆக கொரோனா பாதிப்புள்ளது. மொத்தமாக 31, 241 பேர் பலியாகிவுள்ளனர். பிரேசிலில் 1,45,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,992 பேர் பலியாகிவிட்டனர். சிங்கப்பூரில் 21,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆக உள்ளது.

    English summary
    Coronavirus cases goes beyond 4 million in global level. 13 lakhs affected in America.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X