வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா, பிரேசிலில் உயிரிழப்பு அதிகரிப்பு.. இந்தியாவில் மீண்டும் உயரும் பாதிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,342 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் நாட்டிலும் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,370 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பும் இந்த இரண்டு நாடுகளிலும் ஒரே நாளில் 60ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் கொரோனா தொற்றால் 11 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பால் இதுவரை 2,495,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 88,214,193 பேர் மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 21,919,582 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

coronavirus cases is high in US and Brazil countries

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 28,896,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 11,029,326 பேரும், பிரேசிலில் 10,260,621 பேரும், ரஷ்யாவில் 4,189,153 பேரும், இங்கிலாந்தில் 4,134,639 பேரும், பிரான்சில் 3,629,891 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 63,090 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதியாகி உள்ளது. பிரான்சில் 20064 பேருக்கும், இந்தியாவில் 13463 பேருக்கும் தொற்று நேற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகமரணத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,342 பேர் மரணம் அடைந்தனர்- பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 548 பேர் மரணம் அடைந்தனர். ஸ்பெயினில் 443, ஜெர்மனியில் 442 பேர் மரணம் அடைந்தனர்.

English summary
coronavirus cases is high in US and Brazil countries : 70,537 new cases and 2,374 new deaths in the United States. 63,090 new cases and 1,370 new deaths in Brazil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X