வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது... உயிரிழப்பும் கிடுகிடு சரிவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமே அதிகமாக உள்ளது. அதுவும் முன்பு போல் மோசமான நிலை இல்லை.

2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 11கோடியே 22லட்சத்து 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 24லட்சத்து 84 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர்.

coronavirus cases is low in many countries of the world

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை 8 கோடியே 77லட்சத்து 72ஆயிரம் பேர் மீண்டனர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 2 கோடியே 19லட்சத்து 94 ஆயிரம் பேர் சிசிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 28,824,362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 11,015,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 10,197,531 பேரும், ரஷ்யாவில் 4,177,330 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 4,126,150 பேரும், பிரான்சில் 3,60,827 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல் அண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்

உலகியிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் அமெரிக்காவில் 57,312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 29,357 பேருக்கும், ரஷ்யாவில் 12,604 பேருக்கும். இந்தியாவில் 10,792 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 10,641 பேருக்கும், இந்தோனேஷியாவில் 10,180 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா பாதித்து இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 1309 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் 716 பேரும், ரஷ்யாவில் 337 பேரும், பிரான்சில் 333 பேரும் ஒரே நாளில் மரணம் அடைந்தனர்.

English summary
coronavirus cases is low in many countries of the world. Is high only in the United States. That too is not as bad as before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X