வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறுபடியும் முதலில் இருந்தா? அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலக நாடுகளில் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 5,84,80,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 13,85,778 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 4,04,59,905 பேர் மீண்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 1,66,34,902 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

90லட்சம் பேர்

90லட்சம் பேர்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,24,50,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 90,95,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 6,052,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றால் 2,127,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக பலி

அதிக பலி

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் 1460 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனா தொற்றால் 719 பேரும், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 692 பேரும், போலந்து நாட்டில் கொரோனா தொற்றால் 574 பேரும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 574 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

ஐரோப்பா நாடுகள்

ஐரோப்பா நாடுகள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 172,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34767 பேரும், பிரேசிலில் 32622 பேரும், ரஷ்யாவில் 24822 பேரும், போலந்து நாட்டில் 24213 பேரும், இங்கிலாந்தில் 19875 பேரும், பிரான்சில் 17881 பேரும், ஜெர்மனியில் 16612 பேரும், உக்ரைனில் 14580 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகள் அச்சம்

உலக நாடுகள் அச்சம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உயிரிழப்பும் கடுமையாக உயர்ந்து வருகிறது. மறுபடியும் லாக்டவுன் போடுவதற்கு ஆலோசித்து வருகின்றன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காமல் இதற்கு தீர்வு கிடைக்காதோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன.

English summary
Corona exposure is once again rising sharply in European countries Including Italy, France, Poland, UK The death toll from the corona has risen sharply again in various European countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X