வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காற்றிலும் கொரோனா வைரஸ் பரவும்.. புதிய ஆய்வு திடுக் எச்சரிக்கை.. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சுமார் 3 மணி நேரம் காற்றில் உயிர்வாழ முடியும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. இதையடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) மருத்துவ நிபுணர்களுக்கான புதிய காற்றுவழி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.

Recommended Video

    சூரிய ஒளியால் இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பரவப்போகுதாம்.. லதா சொல்கிறார்.. நம்பாதீங்க மக்களே

    WHOன் நோய்கள் மற்றும் ஜூனோசிஸ் பிரிவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சில சிகிச்சை நடைமுறைகளைச் செய்யும்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

    இதுவரை வைரஸ், அருகாமையில் இருக்கும் பாதித்த நபர் மூலமாகவும், அவர் தொடுவதால், பிற பொருட்கள் மீது அமர்ந்தும் பரவும் எனதான் கூறப்பட்டது. இப்போது காற்று வழியாகவும் பரவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    19 பேருக்கு கூடுதலாக தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415ஆக உயர்ந்தது 19 பேருக்கு கூடுதலாக தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415ஆக உயர்ந்தது

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    அதேநேரம், இப்படி வைரஸ் காற்றில் பரவினாலும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கூறியுள்ளார், மரியா வான் கெர்கோவ். பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் மருத்துவ நடைமுறைகளைச் செய்யும்போது மருத்துவ ஊழியர்கள் இதனால், பாதிக்கப்படக்கூடும். நோயாளியின் தொண்டையில் குழாய் வைக்கப்பட்டு, சுவாசத்திற்கு உதவுவதற்காக சிகிச்சையளிப்பது வழக்கம். அப்போது, இப்படி பரவக்கூடும்.

    மருத்துவ பராமரிப்பு

    மருத்துவ பராமரிப்பு

    ஒரு மருத்துவ பராமரிப்பு வசதியை உருவாக்கும் செயல்முறையைச் செய்யும்போது, ​​இந்த கிருமி துகள்களை காற்றில் பரவி மருத்துவ பணியாளர்களை தாக்கக் கூடும். ஏனெனில் அவை சிறிது நேரம் காற்றில் இருக்க முடியும் என்று வான் கெர்கோவ் கூறினார். சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு பணி செய்யும் போது மற்றும் அந்த நடைமுறைகளைச் செய்யும்போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.

    பொதுக் கருத்து

    பொதுக் கருத்து

    நோயால் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது அல்லது இருமல் போன்றவற்றால்தான் வைரஸ் பொதுவாக பரவுகிறது என்பது பொதுவான முன்னெச்சரிக்கை அறிவிப்பு. ஆனால் ஒரு புதிய ஆய்வு கொரோனா வைரஸ், மூன்று மணி நேரம் வரை காற்றில் உயிரோடு இருக்க வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டியது.

    முகக் கவசம்

    முகக் கவசம்

    சுகாதாரப் பணியாளர்கள் N95 முகக் கவசங்களை அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிரது. அனைத்து திரவ அல்லது காற்று வழி துகள்களை 95% வடிகட்ட இந்த மாஸ்க்கால் முடியும். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுப்படி, உலகம் முழுக்க, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை COVID-19 பாதித்துள்ளது.

    English summary
    The World Health Organization is considering new “airborne precautions” for medical professionals after a new study suggested that the coronavirus can survive in the air for hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X