வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வுகானில் இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியாகி இருக்கிறது என்ற உண்மையை மறைக்க சீனா முயற்சிக்கிறது. இந்த பரிசோதனைக் கூடத்தைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளர்கள் தற்போது மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து சீனாவின் மீது வழக்குத் தொடர எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்று அமெரிக்க அரசியல் ஆலோசகர் ஸ்டீவ் ஸ்டீவ் பன்னோன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வருவதற்கு பக்க பலமாக இருந்தவர் ஸ்டீவ் பன்னோன். இவர்தான் இந்த செய்தியை அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்துள்ளார். அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்பிஐ ஆதாரங்களை திரட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Coronavirus leaked from the Institute of Virology in Wuhan america is gathering the evidence says Steve Bannon

வுகான் பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் வெளியாகி இருக்கிறது என்பதை அந்தக் கூடத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளே தெரிவித்து உள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளனர். இதை 'பயாலஜிக்கல் செர்னோபில்' என்று கூட அழைக்கலாம். அந்தளவிற்கு மனித அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

வுகானின் இறைச்சி சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக சீனா கூறி வருகிறது. ஆனால், உண்மைக்கு புறம்பாக வுகான் பரிசோதனைக் கூட்டத்தில் இருந்துதான் வெளியானது என்பதை சீனா மறைக்கிறது. தற்போது ஆதாரங்கள் கிடைத்து இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவின் மீது வழக்கு தொடர உள்ளது. இதை மறைப்பதற்கு எலியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று திரித்துக் கூறி வருகின்றனர்.

இந்த பரிசோதனைக் கூடத்தில் பணியாற்றியவர்கள் பிப்ரவரி மத்தியில் இருந்தே ஹாங்காங், சீனாவில் இருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மிருகத்தனமான, சர்வாதிகார சீனாவின் ஆட்சியை கீழே இறக்குவதற்கு அனைத்து மேற்கத்திய நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும்போது தவறாக வைரஸ் வெளியேறி இருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்ப ஆய்வாளர் மூலம் வெளியேறி இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி.. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும்.. அமெரிக்க நிபுணர் தகவல் கொரோனா தடுப்பூசி.. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும்.. அமெரிக்க நிபுணர் தகவல்

ஹூபே மாகாணத்தில் இருந்து வைரஸ் தொற்று வெளியாகி இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் தைவான் டிசம்பர் 31ஆம் தேதி தெரிவித்துள்ளது. இத்துடன் பீஜிங்கில் இருக்கும் தொற்று நோய் தடுப்பு மையத்திடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துதான் ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மேற்கொண்டுள்ளது.

சீனா இதுகுறித்து டிசம்பர் இறுதியில் தெரிவித்து இருந்தால், அப்போது கட்டுப்படுத்தி இருக்கலாம். 95 சதவீத உயிரிழப்பை தடுத்து இருக்கலாம். பொருளாதார இழப்பும் உலக அளவில் இந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிய நுண்ணுயிர் ஆய்வாளரும், மருத்துவருமான லி மெங் யான், தனது அனுபவத்தை வெளியிட்டு இருந்தார். கொரோனா வைரஸ் தொற்று குறித்து நீண்ட நாட்களுக்கு முன்னரே சீனா அறிந்து இருந்தது என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    US Corona Vaccine Enters Final Stage | Moderna Vaccine Update | Oneindia Tamil

    English summary
    Coronavirus leaked from the Institute of Virology in Wuhan america is gathering the evidence says Steve Bannon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X