வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கு முடிந்தாலும் அடுத்த 12 மாதங்களுக்கு சமூக விலகல் கட்டாயம்.. நிபுணர்கள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஊரடங்கு காலம் முடிந்தாலும் அடுத்த 12 மாதங்களுக்கு சமூக விலகல் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், உடலில் பாதிப்பு உள்ளவர்கள் மரணத்தை தழுவி வருகிறார்கள்.

    கோவிட் 19 என்ற இந்த கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி மக்களிடம் அவசியம். அப்போதுதான் ஒருவருக்கு ஒருவர் பரவாது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வது மட்டுமே வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இப்போது உள்ள ஒரே வழி.

    லதாவுக்கு கொரோனா இல்லை.. சளி, இருமல்.. ஆனாலும் அவர் எடுத்த முடிவு.. மக்களுக்கு கவுன்சிலிங் தேவை!லதாவுக்கு கொரோனா இல்லை.. சளி, இருமல்.. ஆனாலும் அவர் எடுத்த முடிவு.. மக்களுக்கு கவுன்சிலிங் தேவை!

    பிரதமர் மோடி அறிவிப்பு

    பிரதமர் மோடி அறிவிப்பு

    இதன் அடிப்படையில் தான் பிரதமர் மோடி கடந்த 22ம் தேதி மக்கள் ஊரடங்களை சோதனை முறையில் நடத்த சொன்னார். அது வெற்றிபெற்ற நிலையில் 25ம் தேதி அதிகாலை 12 மணி முதல் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதுக்கும் மக்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த காலத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே கூடாது.

    ஊரடங்கை மதித்தால்

    ஊரடங்கை மதித்தால்

    இந்த ஊரடங்கு உத்தரவை மதித்து நடப்போர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் வெகுவாக குறையும். அத்துடன் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்வர்கள் அத்தனை பேரும் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள். இதனால் புதிதாக யாரும் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும் என்பதால் ஊரடங்கு நல்ல பலன் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது

    12 மாதங்கள் வரை

    12 மாதங்கள் வரை

    இந்நிலையில் ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும் இதன் பாதிப்பு அடுத்த 6 மாதங்கள் முதல் ஒரு வருடங்கள் வரை நீட்டிக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இது தொடர்பாக கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் பீட்டர் டீமெர்ஸோ, ஹானோ லுஸ்டிக், மித் சேரு ஆகியோர் பேட்டி அளித்தனர்.

    மருந்துகள் வேண்டும்

    மருந்துகள் வேண்டும்

    அப்போது அவர்கள் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு மூலம் மக்களை தனிமைப்படுத்துவதால் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும். ஆனால் இது மட்டுமே போதாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரும் நோய் தடுப்பு மருந்துகளால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டால் தான் இந்த நோயை வெற்றிகொள்ள முடியும்.

    40 சதவீத மக்கள் பாதிப்பர்

    40 சதவீத மக்கள் பாதிப்பர்

    துரதிஷ்டவசமாக நேரடி மருந்து என்பது இப்போதைக்கு நம்மிடம் இல்லை என்பது பெரிய குறை. எனவே அடுத்த 6 முதல் 12 மாதங்களில் உலகில் 40 சதவீத மக்களை இந்த நோய் தாக்கக்கூடும். எனவே தற்போதைக்கு நமக்கு கிடைத்துள்ள இந்த நேரத்தை வீணாக்காமல் சிகிச்சை தரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்த வேண்டும். இதேபோல் சிகிச்சைக்கான வார்டுகளையும் நாம் முடிந்தவரை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    எப்படி தடுத்தது சீனா

    எப்படி தடுத்தது சீனா

    சீனாவில் கடுமையாக கடைபிடிக்கப்ட்ட கட்டுப்பாடுகள், அந்த நாட்டை கொரோனாவில் இருந்து மீள செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் பெரிய அளவில் பலனை தரவில்லை. கொரோனாவுக்கு உரிய மருந்தை கண்டுபிடிக்கும் வரையில் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" இவ்வாறு கூறினர்.

    English summary
    california universities experts said that social distance should be maintained at least 6 months to 12 month after curfew end
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X