வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி.. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும்.. அமெரிக்க நிபுணர் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ்க்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று நம்புவதாக அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாணி தெரிவித்துள்ளார்..

Recommended Video

    US Corona Vaccine Enters Final Stage | Moderna Vaccine Update | Oneindia Tamil

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன.

    அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி

    தடுப்பூசிகள்

    தடுப்பூசிகள்

    இதுவரை பல்வேறு நாடுகள் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை உருவாக்கி அதை மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்த்து வருகின்றன. சில தடுப்பூசிகளில் நல்ல பலன்கள் கிடைத்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சில தடுப்பூசிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தடுப்பூசி எப்போது வரும்

    தடுப்பூசி எப்போது வரும்

    உலக சுகாதார மையம் இதுவரை எந்த ஒரு தடுப்பூசி மருந்தும் கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் : கொரோனா வைரஸ்க்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைவரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களுக்கு எப்போது

    பொதுமக்களுக்கு எப்போது

    இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி விட முடியும். ஆனால் அதை பொதுமக்களுக்கு பரவலாக வினியோகிக்க கொஞ்ச காலம் ஆகும். தடுப்பூசிகளைப் பொறுத்தவரை நல்ல இடத்தில் தான் நாம் உள்ளோம். நாங்கள் நம்புகிறபடி நடந்து விட்டால், இந்த ஆண்டு இறுதியில் இருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி வந்து விடும்.

    எவ்வளவு காலம் நீடிக்கும்

    எவ்வளவு காலம் நீடிக்கும்

    இதுவரையில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தியை தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பது எது என்ற இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும். கொரோனா வைரஸ் எதிர்ப்புச்சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பதில் அளிக்க ஓராண்டோ அல்லது அதற்கு சற்று கூடுதலான காலம் ஆகலாம்" என்றார்.

    நம்பிக்கை அளிக்கும் மாடர்னா

    நம்பிக்கை அளிக்கும் மாடர்னா

    அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி குறித்து பேசிய அந்தோணி ஃபாசி, மாடர்னாவின் முடிவுகள் குறிப்பாக நம்பிக்கைக்குரியவை என்றும், அந்த தடுப்பூசி இயற்கையாகவே தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும் விஷயங்கள் காணப்படுகிறது என்றார். சீனாவில் தான் தொற்றுக்கு நோய்க்கு முதலில்மருந்துவரும் என்று நினைத்தேன். ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் திட்டமிட்ட காலத்திற்குள் மருந்து வந்து விடும் என்று உணர்கிறேன்" என்றும் ஃபாசி கூறினார்.

    English summary
    US expert Anthony Fauci has predicted the country will meet its goal of a coronavirus vaccine by year’s end.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X