வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கார்பெட்டைத் தூக்கிப் பார்த்தா... என்னா ஒரு புத்திசாலித்தனம்.. செம தம்பதி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா லாக்டவுன் காலத்துக்கேற்ற கரெக்டான செய்திதான் இது.

எல்லோருக்கம் மோனோபோலி என்ற விளையாட்டு குறித்துத் தெரியும். விளையாடாதவர்கள் இருக்க முடியாது. உலகப்புகழ் பெற்ற மோனோபோலி விளையாட்டு 86 ஆண்டுகளுக்கு முன்பு 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தற்போது இதை ஹாஸ்ப்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முன்பெல்லாம் பணக்காரர்கள் மட்டுமே விளையாடக்கூடியதாக இருந்து வந்தது.

 மோனோபோலி விளையாட்டு

மோனோபோலி விளையாட்டு

தற்போது அனைத்து வகையான மக்களும், அனைத்து வயதினரும் விளையாட கூடிய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் பிரபலமான இந்த விளையாட்டு தற்போது நம் ஊரிலும் மிகவும் பிரபலமடைந்து விட்டது.

 திறமை

திறமை

இந்த விளையாட்டு அதிர்ஷ்டம் மற்றும் திறமை சார்ந்ததாகும். எனவே இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் இதற்கு எளிதில் அடிமை ஆகிவிடுகிறார்கள். நம் வீட்டில் நடக்கும் சாதாரண விசேஷங்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான சிறு கெட் டுகெதர்களிலும் இந்த விளையாட்டை விளையாடி மகிழலாம்.

 சீரியஸா எடுத்துக்காதீங்க

சீரியஸா எடுத்துக்காதீங்க

இந்த விளையாட்டை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அனால் சிலர் இதை மிகவும் சீரியசாகவும் எடுத்துக் கொண்டு இதற்கு அடிமையாகி விடுகிறார்கள் .பின் வரும் சம்பவம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

 கார்பெட்டுக்குக் கீழ்

கார்பெட்டுக்குக் கீழ்

ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டை மறுசீரமைக்கும் பொருட்டு சில மாற்றங்களை செய்ய முயற்சிக்கும் போது கீழிந்த கார்பெட்டுக்கு அடியிலிருந்த தரை மோனோபோலி கேம் போர்டு வடிவில் அமைந்திருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அச்சு அசலாக மோனோபோலி விளையாட்டை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது அது.

 வைரல் படம்

வைரல் படம்

அவர்களுடைய மருமகன் அதனைப் புகைப்படமாக எடுத்து தன்னுடைய ரெடிட் வலை தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ஒருவர் "இதை என் மனைவியிடம் காண்பித்த போது எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் 50 களில் கட்டப்பட்ட வீடுகளிலும் இது போன்று வடிவமைக்கப்பட்டிருந்ததை நினைவுக் கூர்ந்தார்" என்று பதிவிட்டிருந்தார்.

 டிசைன் ஓகே

டிசைன் ஓகே

மற்றுமொருவர் "என் மனைவியிடம் எப்படியோ கெஞ்சி, கூத்தாடி பின் ஒரு வழியாக அவரை இதை போல் நாங்களும் செய்ய சம்மதிக்க வைத்துவிட்டேன். என்னதான் எனக்கு இந்த விளையாட்டு பிடிக்காத போதும் இதன் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு விட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 அந்தக் காலத்திலேயே இப்படி

அந்தக் காலத்திலேயே இப்படி

அந்த காலத்தில் இந்த விளையாட்டு மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன வாசகர்களே.. நீங்கள் எப்போதாவது இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறீர்களா..? உங்கள் கருதுக்களை கமெண்ட்டில் பதிவு செய்யவும்.

English summary
A couple found monopoly board the size of an entire room underneath the old carpet when they planned to do some changes in their house. Their son-in-law took this to his Rediff post and the picture goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X