வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 3வது அலை... உலகம் முழுவதும் மீண்டும் தீயாக பரவல் - ஒரே நாளில் 6,51,816 பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை மீண்டும் தீயாக பரவத்தொடங்கியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் 6,51,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா பரவல் சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் தீயாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் 6,51,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,73,01,248 பேராக உயர்ந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதலே உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறி பல பெயர்களோடு தற்போது பரவி வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் பலரையும் வைரஸ் தொட்டு விட்டுதான் செல்கிறது.

Covid 19 Update: Corona 19,73,01,248 people affected in worldwide

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தினாலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்றே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 4,08,237 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,84,88,201 பேராக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்து ஒரே நாளில் 10,234 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம்
கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,213,045 பேராக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 1,46,00,002 பேர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 87,079 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை! பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை!

அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,962 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 3,55,72,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 2,96,25,006 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதித்து மொத்தம் 6,28,468 பேர் மரணமடைந்துள்ளனர்

பிரேசில் நாட்டில் கொரோனாவால் 41,853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,98,39,369 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் 1,85,69,991 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 1,354 பேர் மரணமடைந்துள்ளர். கொரோனா பாதித்து நாட்டில் 5,54,626 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,673 பேராக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3,15,71,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் 3,07,36,241 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந் 549 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் மொத்தம் 4,23,244 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வந்தாலும் டெல்டா, கப்பா, டெல்டா பிளஸ், ஆல்பா, பீட்டா, காமா என பலவிதமாக உருமாறி வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு எப்போது உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
The corona spread has been under control for a few weeks and has started to spread like wildfire again. In a single day, 6,51,816 people were affected by corona. This brings the number of corona victims to 19,73,01,248.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X