வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகில் கொரோனாவால் 26.56 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரு நாள் கேஸ்கள் குறைவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 523,950 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 265,684,258 பேராக அதிகரித்துள்ளது.

உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.

Covid 19 Update: Corona 26.56 crore people affected in worldwide

கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 376,200 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 239,350,562 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 5,641 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,263,719 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 492 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 55,701 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதன் மூலம் கொரோனாவால் 49,933,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 39,498,111 பேர் மீண்டுள்ளனர். 9,627,031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 492 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 808,608 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ்: சில இனக் குழுக்களுக்கு மட்டும் பிரிட்டனில் அதிக ஆபத்து - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கைகொரோனா வைரஸ்: சில இனக் குழுக்களுக்கு மட்டும் பிரிட்டனில் அதிக ஆபத்து - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 34,632,615 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 470,620 பேராகும். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 34,053,856.

பிரேசில் நாட்டில் மொத்தம் 22,138,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 21,359,352 ஆகும். ரஷ்யாவில் கொரோனாவால் 97 லட்சம் பேரும் பிரான்ஸில் 78 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரிட்டன் உள்ளது.

உலக கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸில் 78 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா 10வது இடத்தில் உள்ளது. அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 99,083 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
The number of people suffering from corona infection is increasing again around the world. In a single day, 523,950 people were infected with the new virus. There the number of corona victims has increased to 265,684,258.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X