வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா எனக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம்... ட்விட்டரில் வீடியோ பதிவிட்ட ட்ரம்ப்

தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா பாதித்தது கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கொரோனாவை பரப்பியதற்காக சீனா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை அலட்சியமாக கருதி மாஸ்க் அணிவதை தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வல்லுநர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு போகும் போது மாஸ்க் அணிந்து ஹெலிகாப்டரில் சென்றார் ட்ரம்ப்.

Covid-19 was blessing from God says US president Donald Trump

கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்த ட்ரம்ப் வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய உடன் மாஸ்க்கை கழற்றிவிட்டு போஸ் கொடுத்தார் ட்ரம்ப். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சல்யூட் அடித்தார்.

உங்களது வாழ்க்கையை கொரோனா ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நன்றாக இருக்கிறேன் என்று பதிவிட்டார். தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விரைவில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், நான் உங்களின் அன்புக்குரிய அதிபர் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் வரம் என்று கூறியுள்ளார். பல கோடி மக்களுக்காக தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பிய சீனா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நேரம் தெளிவாக இல்லை. ஒரு நாள் முன்பு வெள்ளை மாளிகைக்கு திரும்பி வந்ததாக டிரம்ப் செய்தியில் கூறினார், செவ்வாயன்று தான் பேசுவதாகக் கூறினார். ஆனால் இந்த வீடியோ புதன்கிழமையன்று பதிவு செய்யப்பட்டதாக டிரம்பின் தலைமை பணியாளர் மார்க் மெடோஸ் தெரிவித்தார்.

74 வயதான ஜனாதிபதி புதன்கிழமை ஓவல் அலுவலகத்திற்கு திரும்பி வந்ததாக வெள்ளை மாளிகை உறுதியளித்தது. வெள்ளை மாளிகையின் மண்டபங்கள் வழியாக நடப்பதைத் தவிர்ப்பதற்காக ரோஸ் கார்டனில் இருந்து ட்ரம்ப் அலுவலகத்திற்குள் வந்தார்.

கடந்த சில ராணுவ மருத்துவமனையில் இருந்து திரும்பிய ட்ரம்ப்பிற்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று என்று வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடனை எதிர்கொள்ளும் டிரம்பிற்கு காய்ச்சல் எதுவும் இல்லை. ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கிறது.

அவர் இப்போது நான்கு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இல்லாதவர், 24 மணி நேரத்திற்கும் மேலாக அறிகுறி இல்லாதவர், ஆரம்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து எந்த கூடுதல் ஆக்ஸிஜனும் தேவையில்லை, பெறவில்லை என்று கான்லி கூறினார்.

English summary
U.S. President Donald Trump declared that catching the coronavirus was a “blessing from God” that exposed him to experimental treatments he vowed would become free for all Americans, in a video address released on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X