வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்.. "விஆர்டி" மூலம் விளக்கிய அமெரிக்க டாக்டர்.. வரும் முன் காப்போம்!

கொரோனா தொற்று பாதித்த நோயாளியின் நுரையீரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனாவைரஸ் பாதித்த நோயாளியின் நுரையீரல் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவைப் பார்க்கும்போது, கொரோனாவின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை விளக்குவதாக உள்ளது. உலக மக்கள் அனைவருமே பார்க்க வேண்டிய வீடியோ இது.. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்!

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    சீனாவில் உருவானதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.. இந்த வைரஸ் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இது உலக மக்களுக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறது... 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அதைவிட அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா? இதை படியுங்கள்!கொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா? இதை படியுங்கள்!

    நுரையீரல்

    நுரையீரல்

    சளி, இருமல் என்பது இதற்கான அறிகுறி என்று சொன்னாலும், இது எந்த அளவுக்கு மனிதரை தாக்குகிறது, குறிப்பாக நுரையீரல் எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு நோயாளியின் நுரையீரலின் 3 டி வீடியோதான் அது!

    வைரஸ்

    வைரஸ்

    ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் தொராசிக் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கீத் மோர்ட்மேன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது, விர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதுகுறித்து அவர் தெளிவாக விளக்கியுள்ளார். முதலில் வீடியோவில் கொரோனா வைரஸ் அறிகுறியே இல்லாத ஒரு மனிதனின் நுரையீரல் காட்டப்படுகிறது.

    நுரையீரல்

    நுரையீரல்

    பிறகு கோவிட்19 வைரஸ் பாதித்த நோயாளியின் நுரையீரல் காட்டப்படுகிறது. கோவிட் -19 உள்ளதால், அவரது நுரையீரல் சரியாக செயல்பட தவறுவதும் காட்டப்படுகிறது. ஹை பிபி அதாவது உயர் ரத்த அழுத்தம் கொண்ட, ஆரோக்கியமான 59 வயது ஆணின் நுரையீரல் இது. கொரனா தாக்குதல் காரணமாக நுரையீரல் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதை இந்த வீடியோ காட்டுவதாக மோர்ட்மேன் கூறுகிறார்.

    மஞ்சள் நிறம்

    மஞ்சள் நிறம்

    "வீடியோவில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்ட பகுதிகள் நுரையீரலின் பாதிக்கப்பட்ட மற்றும் வீக்கமடைந்த பகுதிகளை குறிக்கின்றன. தீவிரமாக நோய் தாக்கப்பட்டுள்ளதால் மூச்சு விட முடியவில்லை.. அவர் சுவாசிக்க ஒரு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று யாரையும் பாதிக்கலாம். இதற்கு வயது வித்தியாசமே கிடையாது. ஏற்கனவே உடலில் நோய்கள் இருந்தால் கூடுதல் ரிஸ்க் இருக்கிறது. இளைய வயது நோயாளிகளில் கூட, தொற்று எவ்வளவு விரைவாக ஏற்படக்கூடும் என்பதைதான் இது காட்டுகிறது.

    வருமுன் காப்போம்

    வருமுன் காப்போம்

    இந்த அளவிற்கு சேதமடைந்தால், இந்த நுரையீரல் குணமடைய ரொம்ப காலம் ஆகலாம். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இது என்னென்ன செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் இதை மிக கவனமாக எடுத்து கொள்ள வேண்டும்" என்று மோர்ட்மேன் அறிவுறுத்துகிறார். "வரும் முன் காப்போம்" என்பதே கொரோனாவிலிருந்து நாம் தப்ப முக்கியமானது. வந்த பிறகு அவஸ்தைப்படுவதை விட வராமல் தடுக்க, தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம்.

    English summary
    covid19: us doctors released the damage coronavirus patients lungs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X