வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் 2 வாரங்களில் உச்சத்தை தொட வாய்ப்பு- டிரம்ப் கவலை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதை அடுத்து இன்னும் இரண்டு வாரங்களில் உயிரிழப்புகள் உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர்

    அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 1.41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,475 ஆக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 518 பேர் பலியாகிவிட்டனர். கொரோனாவின் பிடியில் சிக்கி வல்லரசு நாடான அமெரிக்கா தவிக்கிறது.

    Death Rate will Peak in 2 Weeks, says Donald Trump

    இந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவமனைகளில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 100 நாட்களில் 1 லட்சம் கருவிகள் உற்பத்தி செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்னும் இரு வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் இன்னும் இரு வாரங்களில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி தம்பதி.. உங்களை பாதுகாப்பதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்- டிரம்ப்அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி தம்பதி.. உங்களை பாதுகாப்பதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்- டிரம்ப்

    எனவே சமூக விலகலை கடைப்பிடித்தல் அவசியமாகிறது. இதனால் அமெரிக்காவில் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கொரோனாவிலிருந்து நாம் முழுவதுமாக மீள்வோம் என தெரிவித்துள்ளார். கொரோனாவால் அதிகமாக பாதித்துள்ள நியூயார்க் நகரத்தை முடக்குவது என்ற அறிவிப்பை டிரம்ப் திடீரென திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Death Rate will Peak in 2 Weeks: Trump Says as US Sees 518 Fatalities in 24 hours
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X